Categories
அமர்நாத் இந்தியா ஜம்மு காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

அமர்நாத் திருப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல்

காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே அமர்நாத் திருப்பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் அனந்த்னாக் அருகே ஒரு பொலிஸ் குழு  மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார். இது அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.

தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி பெறுகின்றனர்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்ததாக  தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள இணைய சேவைகள் தாக்குதலுக்கு பின்னர் தடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான யாத்ரீகர்களின் பஸ் குஜராத்தில் இருந்து புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த சூழ்நிலையை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மோடி டிவிட்டரில் “ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமாதானமானமாக சென்றுகொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான கொடூரமான தாக்குதலால் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவு வேதனை அடைந்தேன். ஆனால் இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களாலும், வெறுப்புணர்ச்சியின் தீய எண்ணங்களாலும் இந்தியா ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

Share
Categories
உலகம் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Share
Categories
இந்தியா காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் : பாதுகாப்பு படையினர் பலர் காயம்

காஷ்மீரில்  4 மணி நேரத்தினுள் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 13 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் வடக்குக் காஷ்மீரில் 5 தாக்குதல்களையும் தெற்கு காஷ்மீரில் ஒரு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

Share