Categories
அறிவியல் பலவகைச் செய்திகள்

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள்

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து  பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. இப்பகுதியிலிருந்து சோலார் ஃப்ளேர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  சோலார் ஃப்ளேர் ஏற்படும்போது இந்த பகுதிகள் மிகப் பிரகாசமாக காணப்படும். சோலார் ஃப்ளேர்  சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது.

இந்த சூரிய பகுதியில் இருந்து கடுமையான  கதிர்வீச்சின் காரணமாக  காந்த ஆற்றல் வெளிப்படுகிறது. இவற்றால் பூமியில் ரேடியோ பிளாக்அவுட்டை ஏற்படுத்தலாம், தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்  மற்றும் கதிர்வீச்சு புயல்கள் போன்றவையும் உருவாகலாம்.

Share