Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன்

லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி

லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர்.

இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது :

நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த  3 தீவிரவாத தாக்குதல்களின் துக்கம் மறைவதற்குள், சென்ற புதன்கிழமை இந்த 24 மாடிக் கட்டிட தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் உள்ள 120 குடியிருப்புகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் மாடியில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்தனர். யார், எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலைதான் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது என்று போலிஸார் கூறியுள்ளனர்.

Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன்

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு லண்டனில்   அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீ கட்டுக்கடங்காமல் விடாமல் எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னமும் மொத்தமாக எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனை பேர் அங்கு சிக்கியிள்ளனர் என்ற விவரம் தெரியாத நிலை உள்ளது.

 

Share
Categories
உலகம் லண்டன்

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர்

மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.

மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share