Categories
அருணாச்சல பிரதேசம் இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.


அருணாச்சல பிரதேசத்தின் பப்பும் பரே மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், லெப்டாப் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன. வெளியே முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழைக் காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ஆழ்ந்த அதிர்ச்சியையும்  வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குப்பைகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை  விடுவிக்க அவசர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், மக்கள் பாதிக்கப்படக்கூடிய  இடங்களைத் தவிர்ப்பதற்காகவும், சீதோஷ்ண காற்றோட்டம் மற்றும் காடழிப்புகளைத் தடுக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், முதல்வர் ரூ. 4 லட்சம் நிலச்சரிவினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு  நிவாரணமாக வழங்கினார்.

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு : 15 பேர் பலி, 120 பேரை காணவில்லை

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை.   சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது  வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள  ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன.

இதில் சுமார் பல வீடுகளுடன்,  140க்கும் மேற்பட்டோரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களின் நிலை  என்ன என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. திபெத் – அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு  பகுதி சரிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இவை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் நீரோட்டத்தை தடுத்துள்ளதோடு, 1.6 கிமீ  தொலைவுக்கு சாலையையும் மூடியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கயிறு கட்டி பாறைகள் அகற்றப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு மணல் குவியல்களில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர்.

Share