Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலை 10ல் தேர்வு: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்பிளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகியதை தொடர்ந்து 2வது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும்.  இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.  இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்சில் உலக கிரிக்கெட் குழு கூட்டம் வருகிற 3 மற்றும் 4ந்தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி செல்கிறார்.

அதற்கு முன் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வருகிற 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என கூறினார்.

இநதிய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் உள்ளனர்.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஹானேவின் சதம் – 104 பந்துகளில் 103 ரன்கள் – இந்தியாவை 310/5 என்ற ரன்களில் தனது இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்ள உதவியது. மழையால் தாமதமாக துவங்கிய போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தலைவர் கோலி 66 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார், அடுத்து விளையாடிய மே. இந்திய அணி 205/6 என்ற ரன்களில் விளையாட்டை முடித்துக் கொள்ள இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மே. இந்திய அணியும் பெரிய ரன் எண்ணிக்கையை அடைய எவ்வித முயற்சிகளும் செய்யாமல்  ஆடியது.
இந்த வெற்றியானது கரீபியன் தீவுகளில் இந்தியா ரன்கள் அடிப்படையில் பெற்ற பெரிய வெற்றியாகும். இந்த ஆட்டத்தின் மூலம் 300 ரன்களை அதிக முறை எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது. இந்தியாவிற்கு இது 96 ஆவது 300 ரன்களாகும். ஆஸ்திரேலியா 95 முறை 300 ரன்களை கடந்துள்ளது.
ரோகித் சர்மா விளையாடததால் ரஹானே துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் சரிவர பந்து வீசவில்லை. இதில் டாஸ் வென்று இந்திய அணியை விளையாடச் சொன்ன அணித் தலைவர் ஹோல்டரும் அடங்குவார்.
Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.

சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை பயிற்சியாளர் பதவியில் கும்பிளே இல்லை. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பதவியை துறந்து விட்டார். இந்த விவகாரத்தை சுற்றி நிறைய சர்ச்சைக்குரிய வி‌ஷயங்கள் உலா வரும் சூழலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் வலுவான இந்திய அணியே அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய தரப்பில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே, முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ‘இளம்’ புயல் ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்கள். அதே போல் சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்களில் ஒருவரை கழற்றி விட்டு ‘சைனாமேன்’ வகை பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. கும்பிளே விலகிய நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கேப்டனுக்கு எதிராக எதையும் சொல்லப்போவதில்லை. அதனால் கேப்டன் விராட் கோலி, ஆடும் லெவன் அணியை தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்வதில் எந்த தொந்தரவும் இருக்காது.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, இன்று கும்ப்ளே பதவி விலகினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லவில்லை.

சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியபோது கோஹ்லி நேரில் ஆஜராகி, கும்ப்ளே குறித்து புகார் கூறினார்.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிபோட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தைஅடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.  கும்ப்ளேவை மாற்றியே தீரவேண்டும் என்பதில் கோஹ்லி பிடிவாதமாக இருந்தார். ஆனால் இதை ஏற்பதில் கிரிக்கெட்வாரியம் மற்றும் கங்குலி குழுவினருக்கு தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கும்ப்ளேவின் பதவிக்காலத்தைநீட்டிப்பதில்லை என்று கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், கும்ப்ளே தாமாகவே முன்வந்து பயிற்சியாளர் பதிவியில் இருந்து விலகி இருக்கிறார்.

Share