Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன.

சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea)

மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த,  சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து  உடனடி நிவாரணம் வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருந்துக் கடைகளில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும் இம்மூலிகையில், “சென்னா க்ளைஸ்கோசைட்ஸ் அல்லது சென்னோசைட்ஸ்” எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவற்றின் வலிமையான இயற்கை மலமிளக்கி விளைவுகள் காரணமாக,  நவீன மருத்துவத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

சென்னா மூலிகை தேநீர், ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்படக்கூடாது. அப்படி இரு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்பட்டால், பல்வேறு பக்க விளைவுகள் உருவாக வழிவகுக்கும்.

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட்

டி மர எண்ணெய் (Tea Tree Oil)

ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும்  பண்புகளைக் கொண்டுள்ளது.

டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.

இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.

 

 

சென் ஜான்ஸ் வர்ட் (St John’s wort)

சென் ஜான்ஸ் வர்ட் பொதுவாக ஐரோப்பாவின் காட்டுப்புற வெளிகளில் சாதாரணமாக வளரும் தாவரமாகும்.  இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணியாகப்  பயன்படுகிறது.

மேலும், இதிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற எண்ணெய் புண்களைக் குணமாக்கும்  என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபயோட்டிக் குணங்களும் இதில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

புற்று நோய் எதிர்ப்பு மருந்து, சைக்ளோபாஸ்பாமைடு உள்ளிட்ட பிற மருந்துகளின் செயல்பாட்டில்  சென் ஜான்ஸ் வர்ட் குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பு,  உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அதைப் பயன்படுத்தினால், விலகல் அறிகுறிகளை இந்த மூலிகை ஏற்படுத்தும். ஆகவே நோய் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம்தரும் மூலிகைகள் : 3 – ஜிங்கோ, ஜின்செங் & இஞ்சி

ஜிங்கோ

இது சீனாவில் வளரும் ஒரு மரத்தின் இலைகளிலிருந்து வருகிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலின் இரத்த சுழற்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஜிங்கோ பிலோபா (Ginkgo biloba) – விலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஃப்ளேவனாய்டு மற்றும் டெர்பனாய்டு ஆகியன எதிர்-ஆக்ஸிடன்ட் (antioxidant) குணங்கள் கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஜிங்கோவினால் ஞாபகசக்தி அதிகரிக்கக்கூடும்.  இதற்கு இரத்தத்தைச் சன்னமாக்கும் (Blood thinner) பண்பும் உண்டு. ஆயினும், ஜிங்கோவினால்  எப்போதாவது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஜின்செங்

ஜின்ஸெங் உலகிலேயே மிகவும் பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூர்வீக அமெரிக்கர்கள் இதனை செயல் ஊக்கியாகவும்,  தலைவலி நிவாரணியாகவும் பயன்படுத்தினர். மேலும்  கருவுறாமை, காய்ச்சல் மற்றும் அஜீரணத்துக்கான சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இன்று, தோராயமாக 6 மில்லியன் அமெரிக்கர்கள் நிரூபிக்கப்பட்ட ஜின்ஸெங் நன்மைகளால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மன மற்றும் உடல் சோர்வை நீக்கவும் தடுக்கவும் உதவுகிறது; ஜலதோஷத்தின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கான நிவாரணியாகவும், அடிக்கடி ஜலதோஷம் வராமலும் தவிர்க்கப் பயன்படுகிறது. ஆண்களின் விறைப்புத்தன்மை (Erectile dysfunction) குறைவைச் சரியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஜின்செங் கடைகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதால், வாங்கும் போது தரமான, கலப்படம் இல்லாததாக தெரிந்தெடுத்து வாங்குதல் நலம்.

இஞ்சி

இஞ்சிச் செடியின் வேர், சாறுகள் மற்றும் எண்ணெய்களை தயாரிக்க பயன்படுகிறது.
இதனை நேரடியாகவும் சாப்பிடலாம்.  இஞ்சி குமட்டலைத் தடுக்க உதவுகிறது, மேலும் வயிற்றுப்புண்களுக்கு எதிராகவும் வயிற்றைப் பாதுகாக்கிறது.

இஞ்சியில் வலி நிவாரணிக்குரிய பண்புகளும் உள்ளன. ஆயினும், பித்தக்கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை  பயன்படுத்தப்படக்கூடாது.

 

 

 

 

 

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 1 – புதினா & எகினெசியா

மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது.

இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

1) புதினா

 

புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற முடியும். புதினா செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஆவிபிடிப்பதால் இழுப்பு, ஆஸ்த்மா, லாரிஞ்சைட்டிஸ் போன்ற நோய் உடையவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யலாம். மேலும் இது இரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிக்கவும் (diuretic) உதவுகிறது.

 

2) எகினெசியா (ECHINACEA)

எகினெசியா அல்லது ஊதா நிற டெய்சி பூ என்று அழைக்கப்படும் இம்மூலிகை அமெரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைக் குணமாக்கவும் பயன் படுகிறது.

இதிலிருந்து உருவாக்கப்படும் கஷாயம் குளிர் நடுக்கம், வயிற்றுப்புண், காய்ச்சல், டான்சில்ஸ் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.  இதனை வாய்கழுவியாகவும் (mouthwash) உபயோகிக்கலாம்.

மேலும் இதனை இரத்தவிஷ நோயைக் குணப்படுத்தவும், வலி நிவாரணியாகவும், குமட்டலை சரியாக்கவும் வெறு சில மருந்துவ முறைகளிலும் உபயோகிக்கிறார்கள்.

 

 

Share