Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட்

டி மர எண்ணெய் (Tea Tree Oil)

ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும்  பண்புகளைக் கொண்டுள்ளது.

டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.

இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.

 

 

சென் ஜான்ஸ் வர்ட் (St John’s wort)

சென் ஜான்ஸ் வர்ட் பொதுவாக ஐரோப்பாவின் காட்டுப்புற வெளிகளில் சாதாரணமாக வளரும் தாவரமாகும்.  இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணியாகப்  பயன்படுகிறது.

மேலும், இதிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற எண்ணெய் புண்களைக் குணமாக்கும்  என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபயோட்டிக் குணங்களும் இதில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

புற்று நோய் எதிர்ப்பு மருந்து, சைக்ளோபாஸ்பாமைடு உள்ளிட்ட பிற மருந்துகளின் செயல்பாட்டில்  சென் ஜான்ஸ் வர்ட் குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பு,  உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அதைப் பயன்படுத்தினால், விலகல் அறிகுறிகளை இந்த மூலிகை ஏற்படுத்தும். ஆகவே நோய் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 2 – ஆறுமணிப்பூ எண்ணெய் & ஃபிவர்ஃபியூ

ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்.

3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil)

ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும்.

மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது.

ஆறுமணிப்பூ எண்ணெயின் முக்கியமான சில பயன்கள் :

  1. ஹார்மோன்களை சீரான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது.
  2. முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது. ஹார்மோன்கள் சீரான நிலையில் இல்லாமல் இருப்பது முகப்பரு உருவாவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று.  ஆறுமணிப்பூவிலுள்ள ஒமேகா-6 கொழுப்புக்கள்  ஹார்மோன்களை சீராக்குவதால் முகப்பருக்களை குணமாக்க முடியும்.
  3. முடி கொட்டுவதை குறைக்க உதவுகிறது.
  4. தோல் நோய்களான தோல் அழற்சி, சோரியாஸிஸ் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
  5. முடக்கு வாதத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

4) ஃபிவர்ஃபியூ (Feverfew)

ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.

காய்ச்சல் மற்றும் மாதவிடாய்  ஆகியவற்றால் உண்டாகும் வலியைக் குறைக்கவும் ஃபிவர்ஃபியூவைப் பயன்படுத்தப்படலாம். ஆனால், சிலசமயம் இது குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கலாம். கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொள்ளக் கூடாது.

Share