Categories
இந்தியா உலகம் சுவிட்சர்லாந்து தலைப்புச் செய்திகள் பொருளாதாரம்

கறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்

இந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு செயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் முதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல் பரிமாற்றத்தின்போது  இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

வரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI அறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.

தானியங்கிப் பகிர்வு எப்பொழுது துவங்கும் என்ற தகவலை சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இந்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கும்.

வெள்ளிக்கிழமை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இம்முடிவு, வேறெந்த வாக்கெடுப்புக்கும் உட்பட்டதல்ல. ஆகவே, இதனைச் செயல்படுத்தலில் நடைமுறை தாமதம் எதுவும் இராது என்று கருதப்படுகிறது.

Share