Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மகாராஷ்ட்ரா மாநிலங்கள்

1993 மும்பை குண்டுவெடிப்புகள் : 6 பேருக்கு தண்டனை, ஒருவர் விடுதலை

மும்பையில் 1993-ல்  12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டதுடன் 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இச்சம்பவம் நடந்து 24 ஆண்டுகளுக்குப் பின் இதனைக் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (TADA) நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

தீர்ப்பின்படி மும்பை தாதாக்களான முஸ்தபா டோசா மற்றும் அபு சலீம் ஆகியோரும், ஃபிரோஸ் அப்துல் ரஷீத் கான், கரீம்ல்லா கான், தஹிர் மர்ச்சன்ட் மற்றும் ரியாஸ் சித்திக் ஆகியோருடன் சேர்ந்து மும்பையில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அப்துல் கய்யூம் என்பவர் குற்றவாளி என நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் செவ்வாய்க் கிழமையிலிருந்து கோர்ட் முடிவு செய்யும்.

Share