Categories
சேலம் தமிழகம் மாவட்டம் விவசாயிகள் போராட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லியில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குகொண்டனர். கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க  வேண்டும் என்றும் நதி நீர் இணைப்பு குறித்தும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்ததுடன், தமிழக அரசும் பாரபட்சமின்றி அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரினர்.

இதுபோல புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

 

Share
Categories
இந்தியா

தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற்தால், விவசாயி அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார். அவர் உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது.

பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய 15 விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் விடுவிக்கப் பட்டனர். அய்யாகண்ணுவிடம் தில்லி நாடாளுமன்ற வீதி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share