Categories
டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விம்பிள்டன் விளையாட்டு

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர்.

போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.  ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்துள்ளார். மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

 

 

Share
Categories
டென்னிஸ் விம்பிள்டன் விளையாட்டு

விம்பிள்டன் : ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகளில், ரோஜர் பெடரர் காலிறுதிக்கான தகுதி பெற்றார்.

அவர் ஜெர்மனியின் திறமையான ஆட்டக்காரரான மிஷா செவரேவ்வை 7-6(3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முப்பத்தி ஐந்து வயதாகும் பெடரர் வெற்றி பெற்றால் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருப்பார். பெடரர் கடந்த மூன்று ஆட்டங்களிலும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வென்று வருகிறார்.
உலகின் முப்பதாவது தர நிலை வீரராக இருக்கும் செவரேவ் இதுவரை நான்கு முறை பெடரருடன் விளையாடியுள்ளார்; ஆனால் ஒருமுறை கூட வென்றதில்லை. செவரேவ் 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரரை வெல்வதற்கு கடும் முயற்சி செய்தாலும் முதல் செட்டில் ஒரு டை-பிரேக்கரை எதிர்கொண்டது தவிர நிலைத்து விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களில் பிரேக் பாயிண்ட்களை எடுத்து ஆட்டத்தை ஒரு ஏஸ் சர்வீசுடன் வென்றார்.
Share