Categories
இந்தியா கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பெங்களூரு

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார். இந்த ஆப் சமீபத்தில் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தது. இதுபோன்ற 5 ஆப்களை உருவாக்கி, அதில் வரும் விளம்பரங்கள் மூலமாக ரூ.40,000 வருவாய் ஈட்டியுள்ளார். ‘Aadhaar e-KYC’ ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 50,000 முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

e-Hospital என்ற ஆப்-பிற்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிகாரபூர்வ பயனாளர் முகமையைச் சேர்ந்த ஆப் ஆகும். தனது ‘Aadhaar e-KYC’ ஆப்-பிற்கு அதிகாரபூர்வ தன்மை வேண்டும் என்பதற்காக தேசிய தரவுப்பாதுகாப்பு சர்வரை அபினவ் ஹேக் செய்துள்ளார். அதில்தான் இ-ஹாஸ்பிடல் சிஸ்டம் உள்ளது. இந்த சர்வரில்தான் அரசு மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவு மேலாண்மை விவரங்கள் அடங்கியுள்ளன என்று கூறியுள்ளது போலீஸ்.

 

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு  சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள  சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். டி.வி., சிறப்பு சமையலறை, சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருக்க அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஏழு மற்றும் எட்டாவது வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் செயல்படவில்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்மூலம், டிஐஜி ருபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது அம்பலமாகி உள்ளது.

Share
Categories
இந்தியா கர்நாடகா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

பெங்களூரு நகரின் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

பெங்களூரு நகரின் முழுமையான புதிய மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கட்டுமானம் 10 ஆண்டுகளுக்கு முன்  தொடங்கப்பட்டது.

நகரில் உள்ள 4 திசைகளையும் இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 18.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிழக்கு-மேற்கு திசையில் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பாதை அமைக்கப்பட்டு, அதில் கடந்த ஆண்டு முழுமையான சேவை தொடங்கப்பட்டது.

அதே போல் 24.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்கு-தெற்கு திசையில் நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை பாதை அமைக்கும் பணிகள் தற்போது தான் முடிந்தது. இதில் நாகச்சந்திரா-சம்பிகே ரோடு இடையே பாதை அமைக்கப்பட்டு அதில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது சம்பிகே ரோட்டில் இருந்து எலச்சனஹள்ளி வரை பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. அத்துடன் முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.

இதையடுத்து நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி பசுமை பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா மற்றும் முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட முழுமையான சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, முதல் கட்ட திட்டத்தின் முழுமையான மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 

Share