Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் புதுச்சேரி

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம்

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் சமீபத்தில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர, ஆளுனர் கிரண்பேடி புதுச்சேரியின் நிர்வாகத்தில் தலையிடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியிலிருந்து திரும்பப் பெறக்கோரி, இன்று அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். மிக நேர்மையான அதிகாரியென ஊடகங்களால் புகழப்பட்ட இவர், அப்படியே கட்சி சார்பற்று நேர்மையான ஆளுனராகவும் இருப்பார் என மக்கள் நினைத்தனர். நேற்று ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விஷயம் புதுவை முதல்வருக்கு தெரிவிக்கப்படாமல் நடந்தேறியதாகத் தெரிகிறது. இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் என அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேர்மையாளர் என்று புகழப்பட்ட கிரண்பேடி,  பா.ஜ.க.- வின் மத்திய அரசுக்கு இப்படி தனது விசுவாசத்தை காண்பிப்பார் என்று சற்றும் எதிர்பாராத மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share