Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
செய்தித்தாள்கள்

இணையத்திலிருந்து செய்திகள்

இஸ்ரேலில் மோடி | திருப்பிவிடப்பட்ட விமானம் | உடைபற்றிய உகாண்டா அரசின் உத்தரவு | நீட் தேர்வு மனு தள்ளுபடி | கிழக்கு மாகாண புதிய ஆளுநர் | டெங்கு கொசு ஒழிப்பு | மே.வங்க ஆளுநர் மிரட்டினார் | புதிய தலைமை தேர்தல் ஆணையர்

 பி.பி.சி. தமிழ்

இஸ்ரேலில் நரேந்திர மோதி உரையின் 5 முக்கிய அம்சங்கள்

இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.

பறவையால் தாக்கப்பட்டதா? திருப்பிவிடப்பட்டது ஏர்-ஏசியா விமானம்

பறவையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் விமானம் பிரிஸ்பேன் நோக்கி திருப்பிவிடப்பட்டது

மார்பகங்கள்தொப்புள்முழங்கால் தெரியாமல் உடையணிய உகாண்டா அரசு உத்தரவு

உகாண்டாவில் அரச பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. பெண்கள் மார்பங்களை மறைக்கும்படி சுற்றறிக்கை.

தமிழகத்தில் `நீட்‘ தேர்வுக்கு விலக்கு கோரிய மனு தள்ளுபடி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக மாணவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

டெங்கு அச்சுறுத்தல்: கொசு ஒழிப்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவும் இலங்கை ராணுவம்

நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மே.வங்க ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி, அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்

நசீம் சைதிக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.

Share