Categories
ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த அவரது சகோதரர் தீபக் அழைத்ததால் அங்கு சென்றதாகவும், தீபக் அவரை திட்டமிட்டு அழைத்து ஏமாற்றி பிரச்சனை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

Share
Categories
அ.தி.மு.க. கட்சிகள் தமிழகம்

ரூ.20 கோடி மோசடி புகார்: போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர் தீபா குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது பேரவையை முறையாக பதிவு செய்ய தவறிவிட்டார் என்றும், பேரவை பதிவு செய்துவிட்டதாக கூறி உறுப்பினர் விண்ணப்பங்களை விற்பனை செய்த வகையில் ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் தீபா பேரவையை சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசில் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் மேற்கு மாம்பலம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு  போலீசார் சென்றனர். அங்கு பேரவை முறையாக பதிவு செய்யப்பட்டதா? என்பது முதல் விண்ணப்ப படிவ விற்பனை வரை ஜெ.தீபாவிடம் போலீசார் விசாரித்தனர்.

மோசடி புகார் கொடுக்கப்பட்டு உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஜெ.தீபாவிடம் போலீசார் கூறியுள்ளனர். 1 மணி நேரம் விசாரணை முடிந்த பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்.

அதனைதொடர்ந்து தீபா செய்தியார்களிடம் கூறியதாவது:

 

போலியான குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியாது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Share