Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் தினமும் நிர்ணயம்

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்ய்ம் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அன்றன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை விவரம் தினமும் காலை 6 மணிக்கு பங்க்குகளில் மாற்றம் செய்யப்படும்.  இப்புதிய நடைமுறையின் முதல் நாளான இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் 1.12, டீசல் 1.24 குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய முறைப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி செலவு, இறக்குமதி மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்திருந்தன.  இவ்வாறு 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாற்றுவது மக்களுக்கு ஒரேயடியாக அதிகமாக மாற்றுவது போல தெரிந்துவந்தது.

ஆகவே, தினமும் விலைமாற்றும் இப்புதிய முறை இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

Share