Categories
இந்தியா டில்லி

டெல்லி மாநகராட்சிகள்- மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் வசம்

கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நடைபெற்ற டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் வசமுள்ளது.

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதலே டெல்லி மாநகராட்களுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி 103 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 26 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தற்போதைய வெற்றி மற்றும் முன்னிலை நிலவரப்படி, டெல்லி மாநகராட்சிகளை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share