Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள் மேற்கு வங்காளம்

டார்ஜீலிங்கில் கலவரம்: ஒருவர் பலி; 36 பேர் படுகாயம்

டார்ஜீலிங்கில் ஜூன் 9 ம் திகதி தொடங்கிய  தனி மாநில கோரிக்கையைத் தொடர்ந்து நடைபெறும்  வன்முறையின்  தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM)-வினருக்கும் நடந்த மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 36 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM) தலைவர்கள் தங்கள் தரப்பில் 3 பேர் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரின் போராட்டங்கள் “வடகிழக்கு மற்றும் சில வெளிநாட்டு நாடுகளின் கிளர்ச்சி குழுக்கள் ஆதரவுடன் ஆழமான வேரூன்றி சதி வேலை” என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு ஜி.ஜே.எம் இன் உதவி பொது செயலாளரான பினய் தமங் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதுடன், டார்ஜீலிங்கைச் சேர்ந்த ஜி.ஜே.எம் எம்.எல்.ஏ. அமார் ராய் மகன் விக்ரம் ராய் என்பவரை கைது செய்தனர். அதன் பின்னரே இந்த வன்முறைப் போராட்டங்கள் துவங்கின.

 

Share