Categories
இந்தியா ஜி.எஸ்.டி. டில்லி

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது.

இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து, எம்.பி.,க்களும் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கவுள்ள இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., அறிமுக விழாவை எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்துவதற்காக, இன்று இரவு, 10:00 மணிக்கு, பார்லிமென்ட்டில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Share