Categories
செவ்வாய் கிரகம் நம்பினால் நம்புங்கள்

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி  ரோவர், 2004ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

இது பள்ளமாக இருக்காது. மிகப்பெரிய ஏரியாக இருக்கலாம். இதில் காணப்படும் பாறைகள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Share
Categories
காணொளி செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் நம்பினால் நம்புங்கள்

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர்.

நாசாவின் (NASA)  செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால்  (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்,  செக்யூர்டீம்10  (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது.

“பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர்.

மேலும் செக்யூர்டீம்10-இனர்  “இவ்வமைப்பு பொதுவாக செவ்வாய் கிரகத்திலோ, சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களிலோ காணப்படும் இதர பள்ளங்களைப் போன்றதல்ல;  வட்டவடிவ அமைப்பில் இந்த பாறைகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டதைப்  போல் தோன்றுகிறது –  அல்லது – அது அழிந்தோ அல்லது புதைந்தோ இருக்கும் மிகப்பெரிய அமைப்பின் பகுதியாகவோ, இடிபாட்டுப் பகுதியாகவோ கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.

இந்த காணொளியைக் குறித்து  பலரும் கருத்துக்களை எழுதியுள்ளனர். சிலர், இப்பாறைகள் செயற்கையாக வட்ட வடிவில் அமைக்கப் பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“உண்மையில் எனக்கு ஒரு இயற்கையான பள்ளம் போல தோன்றுகிறது, “என்று ஒரு கருத்துரையாளர் குறிப்பிட்டார். “இது பொதுவாக காணப்படும், இயற்கையால் மாற்றமடைந்த ஒரு பாறையைப் போல தோன்றுகிறது” என்று மற்றொரு விமர்சகர் எழுதினார், “செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த வட்டம் (சாப்பிடும் உணவான) பேகலின் ஒரு பகுதியாக இருக்குமோ” என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.

Share
Categories
அறிவியல் செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டம்: கோடீஸ்வரர் இலான் மஸ்க் வெளியிட்டார்

கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார்.

இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).

மஸ்கின் திட்டப்படி விண்கப்பலைக் காலியாக பூமியிலிருந்து முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் தொடர்ச்சியாக டேங்கர் ராக்கெட்டுகளில் எரிபொருளை அனுப்பி, வழியில் ஆங்காங்கே விண்கலத்தில் நிரப்பவெண்டும். ஒரு வெற்று விண்கப்பலுக்குக் கூட, மனிதகுலம் இதற்கு முன்னர் அனுப்பிய ராக்கெட்டுகளில் நிரப்பியதைவிட அதிக அளவில்  எரிபொருள் தேவைப்படும்.

விண்வெளிக் கப்பலும், ராக்கெட் டேங்கர்களும், மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். மேலும், செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் மீத்தேனை எரிபொருளாக நிரப்பி உபயோகித்து, மீண்டும் விண்கலத்தையும், டேங்கர் ராக்கெட்டுகளையும் பூமிக்கு அனுப்ப முடிய வேண்டும். இல்லையென்றால், செவ்வாய் கிரகம் விண்கப்பல்களின் சுடுகாடாக மாறிவிடும், என்கிறார் மஸ்க்.

 

மேலும் கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக் கப்பல், 100 பேர் 80 நாள்கள்வரை வசிக்கும் அழுத்தம் ஊட்டப்பட்ட தளத்துடன் மற்றொரு 400 டன் வரையிலான சரக்கு சேமிக்கும் இடமும் கொண்டதாக இருக்கவேண்டும், என்கிறார் மஸ்க். இச்சரக்குகளில் செவ்வாயில் கட்டுமானப் பணிக்கான சாதனங்களுடன், பிரயாணிகளின் சாமான்களும், எரிபொருள் சாலை கட்டத் தேவையான பொருட்களும் அடங்கும்.

 

Share
Categories
தொழில் நுட்பம்

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் புதிய ரோவர் விண்கலத்தின் மாதிரி

செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக சில வருடங்களுக்கு முன்னர் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.

பல நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து குறித்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றது.

இந்நிலையில் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது.

அங்குள்ள பௌதீக அமைப்பு மற்றும் காலநிலைகள் என்பவற்றிற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் இவ் விண்கலம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் முன்னைய கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினை விடவும் வித்தியாசமான வடிவமைப்பினை இது கொண்டுள்ளது.

விரைவில் வடிவமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் அதன் மாதிரியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் நீளமானது 8.5 மீற்றர்களாக இருப்பதுடன், எடையானது 5,000 பவுண்ட்களாகவும் காணப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தவிர இதன் வேகமானது 96 to 112 kmh (60 to 70 mph) ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
செவ்வாய் கிரகம் நம்பினால் நம்புங்கள்

செவ்வாய் / பூமி இடையிலான தொடர்பு ?

மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ வழி இருக்கிறதா என்பது பற்றி பேசும்போது, சிலர் நம் சொந்த சூரியக் குடும்பத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். செவ்வாயில் உயிர்கள் வாழ்கின்றன என்றும் நாசா அதனை மறைப்பதாகவும் சில சதி கோட்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

செவ்வாய் கிரகம் சம்பந்தமான பல புகைப்படங்கள் அங்கே வேறு உயிர்களின் நாகரிகம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றன.  இந்த புகைப்படங்களையும் சதி கோட்பாடுகளையும்  புறக்கணிக்க வேண்டும் என்று  விஞ்ஞானிகள் கூறினாலும், செவ்வாய் கிரகத்தின்  காந்தப்புலம் மறைவதற்கு முன்பு, அதன் மேற்பரப்பில் திரவப்  பெருங்கடல்கள் ஒருகாலத்தில் இருந்ததாக  ஒப்புக் கொண்டுள்ளனர். முன்பொரு காலத்தில் உயிர்கள் அங்கே வாழ்ந்தனவா ? செவ்வாய் கிரகத்தில் தற்போது கியூரியோசிடி ப்ரொபினால் நடத்தப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் இதற்கான விடையைத் தேடியே அமைக்கப்பட்டுள்ளன.

Share