Categories
இந்தியா ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி., சான்று பெற கைகொடுக்கிறது மொபைல் போன்

ஜி.எஸ்.டி., பதிவுக்காக, வலைதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான சான்று கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக நிறுவனங்களும், வர்த்தகர்களும் தெரிவித்து உள்ளனர்.இப்பிரச்னை குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் கையொப்பம் மூலம் பதிவு சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், வங்கி விபரங்களை அளித்து பெறலாம் அல்லது மொபைல் போன் மூலம் கடவுச் சொல் பெற்றும் சான்று பெறலாம். ஜி.எஸ்.டி.,க்கு விண்ணப்பிப்போர் பான் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வர்த்தகம் நடைபெறும் மாநிலம் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும்.பான் கார்டு விபரங்களை, மத்திய நேரடி வரிகள் வாரியம் பரிசீலிக்கும். விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணில், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அனுப்பப்படும். அது போல, மின்னஞ்சலுக்கும் தனி கடவுச் சொல் அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்தால், விண்ணப்பதாரரின் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு, தற்காலிக குறிப்பு எண் வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி, வலைதளத்தில், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பத்திற்கான சான்று, உடனடியாக வலைதளத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share