Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும்  திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம்  பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.


அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது.

இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், வட கொரியா உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகம் உள்ளது என்றார்.

வட கொரியாவின் தற்போதைய நிதானம், பல தரப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனாவிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே என்பது தெளிவு. ஐ.நா.வின் தடைத் தீர்மானத்தின் பின்னர், வடகொரியாவில் இருந்து வரும் சில இறக்குமதிப் பொருட்களை சீனா, நிறுத்திக்கொண்டுள்ளது.

இதனைத் தவிர, முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போல கண்டும் காணாமல் இருக்காமல், தற்போதைய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் ஆணவப் பேச்சுகளுக்குத் தக்க பதில்களை அவ்வப்போது கூறிவருவதாலும், வட கொரியாவின் அண்டைய நாடுகள், எங்கே போர் வந்துவிடுமோ, என்ற அச்சத்தினால் எப்போதும் இல்லாத அளவுக்கு வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாலேயே, இந்த தற்காலிக நிதானம் என்று கருதலாம். இருப்பினும், வட கொரியா போன்ற ரகசியமாக செயல்படும், சர்வாதிகார அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்று நாம்  உறுதியாக சொல்ல முடியாது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில்,  “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

 

Share