Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி

வடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, ஏவுகணை, ராக்கெட் என்ஜின், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என பல்வேறு சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. ஐ.நா.வின் பல்வேறு தடைகளையும் மீறி இந்த சோதனைகளை வடகொரியா நடத்துகிறது.

சமீபத்திய வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

வடகொரியாவின் இந்த ஏவுகணையானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Share
Categories
உலகம் ஏவுகணை தலைப்புச் செய்திகள் போர்கருவிகள் வட கொரியா

வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு  நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஜப்பான் அருகிலுள்ள கடற்பகுதியில் விழுந்ததாக பின்னர் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக, வடகொரியா விவகாரம் தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களிடமும் டிரம்ப் நேற்று போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் அடுத்த வாரம் நிகழும் ஜி-20 மானாட்டில் இவ்விஷயம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தியிருக்கிறது. இந்த நபருக்கு இதை விட்டால் வாழ்க்கையில் வேறு வேலையே இல்லையா ?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தென் கொரியா வட கொரியா

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.

Share