Categories
இலங்கை எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share
Categories
இலங்கை

இலங்கை: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்திய ரத்னம் நியமனம்

இலங்கை பாதுகாப்புச் செயலர்,  ஜனாதிபதி  செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்தியரத்னம், ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க,  ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து  கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் மந்திரி ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
Share
Categories
இலங்கை தலைப்புச் செய்திகள்

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் : அதிபர் சிறிசேனா

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில், இறுதிக்கட்டப்போரின்போது ஏராளமானவர்கள் காணமல் போனதாகக் கூறப்பட்டது. அவர்களது உறவினர்களை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்தித்துப் பேசினார்.
அப்போது, இறுதிகட்டப் போரின்போது, சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இதற்காகக் கொழும்புவில் இன்று நடைபெறும் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
Categories
இலங்கை

வெளிநாடு சென்ற இலங்கை தமிழ் பெண் பரிதாபமாக மரணம்

இலங்கையிலிருந்து தொழில் வாய்ப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரியாத்திலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதில் குருசாமி ஐயா ரஞ்சிதம் என்ற 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டையில் – C. 31/B வண்ணான்கேணி, பளை என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடவுச்சீட்டில் – 66/8, புனித ஜேம்ஸ் வீதி, கொழும்பு – 15 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு அறிவித்துள்ளது.

இவரைப்பற்றி தகவல்கள் தெரிந்தவர்கள் 011 – 2338836 அல்லது 011 – 5668634 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
இலங்கை விளையாட்டுத்துறை

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்றெடுக்கப்படும் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார்.

வறுமை காரணமாக தான் வென்றெடுத்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர ஒலிம்பிக் பதக்கம் என்பது சுசந்திக்கா ஜயசிங்கவின் ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல என்று கூறினார்.

அது நாட்டுக்கு சொந்தமானது என்று கூறிய அமைச்சர் ஜயசேகர, அதனை விற்பனை செய்வதற்கு சுசந்திக்கா ஜெயசிங்கவிட்கு எந்த உரிமையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

எனவே எதிர் காலத்தில் நாட்டுக்கு கிடைக்கும் பாதகங்களை அதனை வென்றெடுக்கும் வீரர்கள் விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Share
Categories
இலங்கை

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி  91 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.   மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கைக்கு மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் மிகமோசமான வெள்ளம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 ஆயிரம் வீடுகள் அழிந்தன. 250 பேர் பலியாகினர்.

Share
Categories
இந்தியா இலங்கை

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திப்பு

இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட தூதுக்குழு ஒன்றும் வந்துள்ளது.

டெல்லி தாஜ்பேலஸ் ஓட்டலில் அவரை நேற்று காலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து ரனில் விக்ரம சிங்கேயும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை அவர் வரவேற்றார். இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள், பிராந்திய வி‌ஷயங்கள் குறித்து விரிவாகபேசப்பட்டன.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், படகுகளை கைப்பற்றிச்செல்வதும் நீடித்துவருவது பற்றி ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி எடுத்துக்கூறியதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்; மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், ‘‘மக்களின் நலன்களுக்காக, இந்திய–இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே டுவிட்டரில், ‘‘வலுவான பொருளாதார ஒத்துழைப்புக்காக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன’’ என கூறி உள்ளார்.

ரனில் விக்ரம சிங்கே இன்று தனிப்பட்ட பயணமாக ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூருக்கு செல்கிறார் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

Share