Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

சீனாவினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்: முலாயம் சிங் யாதவ்

இந்தியாவுக்கு சீனாவினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மக்களவையில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார்.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாமில் பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இதனையடுத்து இந்தியாவை எச்சரிக்கும் விதமாக பல அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீனா, எல்லையில் படைகளையும் அதிகரித்து உள்ளது.  பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி உள்ள இந்தியா படையை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பிய சமாஜ்வாடி எம்.பி. முலாயம் சிங் யாதவ், அண்டைய நாட்டிடம் இருந்து எழுந்து உள்ள அச்சுறுத்தலை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார்.  மேலும், சீனா, இந்தியாவை இலக்காக அணு ஆயுதங்களை பாகிஸ்தானில் வைத்து உள்ளது. இந்திய உளவுத்துறைக்கு நன்றாக தெரிந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், சீனாதான் நம்முடைய எதிரியாகும், பாகிஸ்தான் கிடையாது என்றும் இந்திய மார்க்கெட்டியில் சீன பொருட்களின் விற்பனை செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
தொழில் நுட்பம் பேஸ்புக்

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’  உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.

எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. ‘தி நெக்ஸ்ட் வெப்’ என்ற சஞ்சிகையின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக அமைந்துள்ளது.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 4.4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் விராட்கோலி (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீச்சில் சுனில் நரினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ரிஷாப் பான்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேஸ்ரிக் வில்லியம்சால் ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் (48 ரன்கள், 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்) சாமுவேல்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த டோனி 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷாப் பான்ட் 35 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேதர் ஜாதவ் 4 ரன்னில் ‘அவுட்’ ஆனார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும், சாமுவேல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். கெய்ல் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

அடுத்து சாமுவேல்ஸ், எவின் லீவிஸ்சுடன் இணைந்தார். எவின் லீவிஸ் அதிரடியாக ஆடினார். 46 மற்றும் 55 ரன்னில் இருக்கையில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய எவின் லீவிஸ் 53 பந்துகளில் சதம் கண்டார்.

18.3 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எவின் லீவிஸ் 62 பந்துகளில் 6 பவுண்டரி, 12 சிக்சருடன் 125 ரன்னும், சாமுவேல்ஸ் 29 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றனர்.

 

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 1–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக நடந்த ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3–1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

 

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார்

சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும்  என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது.

சீனாவின் மேற்கு சாதாரண பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் லோங் ஜிங்சுங், குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் கூறியதாவது:

சீனாவைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளைப் பற்றி கவலைப்படாமல், பெய்ஜிங், டோக்லாம் சர்ச்சைகளை சர்வதேசமயமாக்க முடியும்; ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் அதிக அளவில் தொழில் முறை நட்புறவைக் கொண்டுள்ளன

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை மற்றும் வட கொரிய பிரச்சினையில் சீனா மீது அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் சீனாவின் வணிக திறன்களால் மேற்கத்திய நாடுகள் (சீனாவுக்குச் சார்பாக) இறங்கி வரவில்லை என்பதை எளிதாகக்  காண முடிகிறது.

 

 

Share
Categories
இந்தியா இலங்கை

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திப்பு

இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட தூதுக்குழு ஒன்றும் வந்துள்ளது.

டெல்லி தாஜ்பேலஸ் ஓட்டலில் அவரை நேற்று காலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து ரனில் விக்ரம சிங்கேயும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை அவர் வரவேற்றார். இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள், பிராந்திய வி‌ஷயங்கள் குறித்து விரிவாகபேசப்பட்டன.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், படகுகளை கைப்பற்றிச்செல்வதும் நீடித்துவருவது பற்றி ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி எடுத்துக்கூறியதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்; மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், ‘‘மக்களின் நலன்களுக்காக, இந்திய–இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே டுவிட்டரில், ‘‘வலுவான பொருளாதார ஒத்துழைப்புக்காக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன’’ என கூறி உள்ளார்.

ரனில் விக்ரம சிங்கே இன்று தனிப்பட்ட பயணமாக ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூருக்கு செல்கிறார் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

Share
Categories
இந்தியா உலகம் வங்காளதேசம்

இந்தோ-பங்களா பேச்சுவார்த்தை: தில்லி, டாக்கா பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்து

சீனா வங்காளத்துடன் $25 பில்லியன் மதிப்புடைய 27 ஒப்பந்தங்களை செய்துகொண்ட ஆறு மாதங்களின் பின்னர், புது தில்லி சனிக்கிழமை டாக்காவுடன் நான்கு புரிந்துணர்வு  பாதுகாப்பு உடன்படிக்கைகளை (MoUs) கையெழுத்திட்டது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியா $500 மில்லியன் கடனாக வங்காளத்திற்கு இராணுவத் தளவாடங்கள் வாங்க வழங்க உள்ளது.

 

 

Share