Latest Posts
Apr 23, 2017
தமிழக விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் இன்று 41 வது நாளாக நீடித்தது. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றால் போராட்டத்தை கைவிடுவது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர்கள், இன்று காலை வரை பதில் கடிதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் பதில் கடிதம் வரவில்லை. டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார்.
Read More →Apr 22, 2017
பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லியில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குகொண்டனர். கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நதி நீர் இணைப்பு குறித்தும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்ததுடன், தமிழக அரசும் பாரபட்சமின்றி அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரினர்.
இதுபோல புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.
Read More →Apr 22, 2017
மதுரை விமான நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொறுப்பாளரும் நடிகையுமான நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் குறைகளை கேட்பதில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசை மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இயக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மகளிரணி செயலாளர் ஷோபா ஆஷா கூறியதாவது :
பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
Read More →Apr 22, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கட்சி இரு அணிகளாக பிரிந்து போட்டியிட்ட நேரத்தில், இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்குப்பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டில்லி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, டில்லி போலீசார் முன்பு தினகரன் இன்று ஆஜராகிறார். அவரை கைது செய்ய டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரனையும், அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்று சேருவதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நேரில் ஆஜராவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டு தினகரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது .
Read More →Apr 19, 2017
பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் மல்லையாவை லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்திய வங்கிகளிடம் இருந்து பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்த தவறிய குற்றச்சாட்டும் மல்லையாவின் மீது இருந்தது. நீதிமன்றங்களில் இவை தொடர்பான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டன் சென்றுவிட்டார்.
சிக்கலான நடைமுறைகள்
Read More →Apr 19, 2017
தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார்.
Read More →Apr 19, 2017
அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒ.பி.எஸ் நிபந்தனை விதித்துள்ளார்.
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Read More →Apr 9, 2017
இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகத்துக்கு பதிலாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இனயம் துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி இனயம் சரக்கு பெட்டக மாற்று துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கார்மல் பள்ளி மைதானத்தில் 5-ந் தேதி (நேற்று) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அறிவித்தார்.
Read More →Apr 9, 2017
சீனா வங்காளத்துடன் $25 பில்லியன் மதிப்புடைய 27 ஒப்பந்தங்களை செய்துகொண்ட ஆறு மாதங்களின் பின்னர், புது தில்லி சனிக்கிழமை டாக்காவுடன் நான்கு புரிந்துணர்வு பாதுகாப்பு உடன்படிக்கைகளை (MoUs) கையெழுத்திட்டது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியா $500 மில்லியன் கடனாக வங்காளத்திற்கு இராணுவத் தளவாடங்கள் வாங்க வழங்க உள்ளது.
Read More →Apr 8, 2017
கோவாவின் பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை மந்திரி மேனகா காந்தி, கடந்த 50 வருடங்களில் நீங்கள் திரைப்படங்களை கவனித்தீர்களானால்… காதல் ஆனது ஏறக்குறைய எப்பொழுதும் ஈவ் டீசிங்கில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிசார் திரைப்படங்களை பற்றி நான் பேசி கொண்டிருக்கிறேன்.
ஒரு நபரும் மற்றும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை சுற்றி வருவர். முறையற்ற வகையில் அந்நபர் பெண்ணை சீண்டுவதும், தொடுவதும் பின்னர் மெல்ல மெல்ல அந்த பெண் அவர் மீது காதல் கொள்வதும், அதன்பின் மீதமுள்ள கதையில், சிலருடன் அவர் சண்டை போட்டு பெண்ணை அடைவதும் என இருக்கும்.
Read More →