Latest Posts

இலங்கை: பெட்ரோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Apr 26, 2017

இலங்கையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது பிரதமர் வழங்கிய எழுத்து மூலமான உறுதிமொழியை அடுத்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தாங்கள் தீர்மானித்ததாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் டி.ஜே.ராஜகருணா, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பிரதமர் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது திருகோணமலையில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியங்களை இந்தியாவிற்கு ஒப்படைப்பது சம்பந்தமாக எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாதென்று பிரதமர் எழுத்து மூலமான உறுதிமொழியொன்றை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்படி நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.

Read More →

மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் ஐகோர்ட்டு தடை

Apr 26, 2017

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்களுக்கு 21-ந் தேதி நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘கழிவுநீர், குடிநீர் குழாய்களை சாலையோரம் அமைக்க பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் கால தாமதத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க, நகர் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளை மாநகராட்சிகள், நகராட்சிகள் தங்கள் வசம் கொண்டுவர மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். தி.மு.க-பா.ம.க. வழக்கு இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

Read More →

“அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்”

Apr 25, 2017

(பி.பி.சி. தமிழ்) கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை “மூழ்கடிக்க” வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை “ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்” என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது வின்சன் கப்பலை முதன்மையாக கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ராணுவ படை, இந்த வாரத்தில் தீபகற்பத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வட கொரியாவின் அணு சோதனைகள் குறித்து அமெரிக்கா காத்து வந்த “மூலோபாய அமைதி” முடிவடைந்துவிட்டது என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பால் அந்த போர்கப்பல் அனுப்பப்பட்டது.

Read More →

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு

Apr 25, 2017

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது. இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடிப்பதாக அது அமையும்.

Read More →

ஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன

Apr 25, 2017

(நன்றி: பி.பி.சி. தமிழ்) சண்டிகர் மாவட்ட நிர்வாக வலைதளத்தில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான தரவு மீறல்கள் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. யூஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் சம்பந்தப்பட்ட நபரின் உணவுப்பொருள் வழங்கல் அட்டை தகவல்களும் வலைதளத்தில் காணப்பட்டது. பிரத்யேக தகவல்கள் கசிந்தது வெளிச்சத்திற்கு வந்தவுடன், இந்த வலைத்தள பக்கம் நீக்கப்பட்டது. முன்பு, இது போன்ற தரவுகள் ஜார்கண்ட் மாநில வலைத்தளத்திலும் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்களும், விமர்சங்களும் எழுந்துள்ளன. வெவ்வேறு அரசு திட்டங்களுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் லட்சிய திட்டத்தை தற்போது இந்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

Read More →

டி.டி.வி. தினகரனிடம் தொடரும் விசாரணை

Apr 25, 2017

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசரணை நடைபெறுகின்றது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Read More →

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு

Apr 25, 2017

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு நடைபெறுகின்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் பங்கேற்கின்றன. இதற்கு தொழிற்சங்கங்களும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முக்கிய இடங்களில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Read More →

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி

Apr 25, 2017

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தோர்னபால் ஜாகர்குண்டா சாலையில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 சி.ஆர்.பி.ஃஎப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ) படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தாக்குதல் நடந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படுகிறது. சாலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்களை காக்கும் பணியில், சிஆர்பிஎஃப் படையின் 74-வது பிரிவைச் சேர்ந்த போலீஸ் பிரிவினர் ஈடுபட்டபோது, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் பதுங்கியிருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Read More →

அதிற்சி தகவல்: உடலுக்குக் கேடு விளைவிக்கும் 5 உணவுகள்

Apr 24, 2017

நாம் அன்றாடம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி உண்ணும் சில உணவுகளில் இருக்கும் சில மூலப்பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பனவாக இருப்பது அதிற்சியானதுதான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளைப் பற்றிய சில உண்மைகள் : Chicken Bottled Salad Dressing Non Diary Creamer Ice cream Potato Chips </div>

Read More →

ரூ.20 கோடி மோசடி புகார்: போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர் தீபா குற்றச்சாட்டு

Apr 23, 2017

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது பேரவையை முறையாக பதிவு செய்ய தவறிவிட்டார் என்றும், பேரவை பதிவு செய்துவிட்டதாக கூறி உறுப்பினர் விண்ணப்பங்களை விற்பனை செய்த வகையில் ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் தீபா பேரவையை சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசில் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தார். இந்தநிலையில் மேற்கு மாம்பலம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு பேரவை முறையாக பதிவு செய்யப்பட்டதா? என்பது முதல் விண்ணப்ப படிவ விற்பனை வரை ஜெ.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »