Latest Posts

ஆதார் அட்டைக்காக கைரேகை பதிவு செய்வதில் எவ்வித உரிமை மீறலும் இல்லை : மத்திய அரசு

May 2, 2017

ஆதார் அட்டைக்காக கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வது எவ்விதத்திலும் உரிமை மீறல் இல்ல என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். மேலும் மரபணு சோதனை மேற்கொண்டாலும் தவறில்லை என்றும் முகுல் ரோத்தகி கூறியுள்ளார். பிறநாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை மேற்கொள்ளபடுவதாகவும், சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியமானது என்றும் தெரிவித்தார். விமான பயணத்திற்கு கூட சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.  

Read More →

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

May 2, 2017

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது. காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார். பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந்தேதி நடந்த விபத்தில் பலியானார். அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில், அதே தினத்தன்று மற்றொரு குற்றவாளியான சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

Read More →

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை

May 2, 2017

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் சாரோன், காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கின வாதவிவாதங்கள் முடிந்த நிலையில் இறுதி உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் இன்று (செவாய்க்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும்.

Read More →

கைதான 30 ரோஹிஞ்சாக்கள் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர்

May 2, 2017

காங்கேசன்துறை கடற்பரப்பில் சனிக்கிழமை படகு ஒன்றிலிருந்து கைது செய்துள்ள 30 ரோஹிஞ்சா இனத்தவரையும், 2 இந்தியர்களும் திங்களன்று மல்லாகம் நீதிமன்றத்தில் காவல்துறையினர்ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்களில் ரோஹிஞ்சா 30 பேரையும் கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதிபதி, இந்தியர்களான இரண்டு படகோட்டிகளையும் வரும் 16 ஆம் தேிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கும் ரோஹிஞ்சாக்களில் 14 பேர் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் என்றும் ஏனையோர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அகதி முகாம் ஒன்றில் இருந்து தப்பி வேறு ஒரு நாட்டுக்குச் செல்வதற்காகப் பயணம் மேற்கொண்டபோது, இவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Read More →

முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள்

May 1, 2017

முதுகுவலி எதனால் வருகிறது என்று கண்டுபிடிப்பது கடினமானதுதான். என்றாலும், அதை தடுப்பதற்கும், வலியைக் குறைப்பதற்குமான வழிமுறைகள் பல உள்ளன. அன்றாட சில பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஆரோக்கியமான, முதுகுவலியில்லாத உடலை நெடுநாள் கொண்டிருக்க இயலும். How to prevent backpain Sleep with a pillow under your knees Work your core Increase your calcium and vitamin D intake Change your shoes Straighten Up Don't slump over your desk Put out that cigarette Lighten up your Load Stretch </div> 1.முழங்காலின் அடியில் ஒரு தலையணையை வைத்துத் தூங்குதல்

Read More →

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை

Apr 30, 2017

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சு பிழை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது உடனடி தேவை என்ற நிலையில் அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இந்த பிழை நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது வரையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டாலும், அதனை ஏடிஎம்மில் எடுக்கும்போது பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைகிறார்கள். சமீபத்தில் வங்கி ஏடிஎம்களிலே போலி ரூபாய் நோட்டுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read More →

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது

Apr 30, 2017

பாஜகவின் ஹெச்.ராஜா கண்ணியமின்றி பேசுவதாகவும், இனி தொடர்ந்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவின் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசி வருவதாக குறிப்பிட்டார். பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினார். சோனியா காந்தியைப் பற்றி கேவலமாக பேசினார். தற்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாக பேசியுள்ளதாக கூறினார். டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து போராடிய அய்யாக்கண்ணுவை பேசியது ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி கண்டனம் தெரிவித்தார். தலைவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி பேசினால், எச்.

Read More →

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது

Apr 30, 2017

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பரான மல்லிகார் ஜுனாவிடமும் போலீசார் ராஜாஜி பவனில் வைத்து விசாரித்தனர்.

Read More →

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

Apr 30, 2017

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.

Read More →

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Apr 29, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர அதிர்வை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸ் மிகவும் வித்தியாசமான தன்மை கொண்ட நாடு.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »