Latest Posts

பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது

May 6, 2017

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பலமுறை மீறியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Read More →

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

May 6, 2017

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More →

ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி

May 6, 2017

அன்பு மழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு நன்றிக்கடனாக முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளேன் என்றார். பாகுபலி பட தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நோடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பு தந்த ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read More →

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது

May 6, 2017

குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில் வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’ திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும். 217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Read More →

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

May 6, 2017

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More →

ஜார்கண்ட்: பெண்களின் பெயரில் சொத்து வாங்கினால் பத்திர செலவு வெறும் 1 ரூபாய்

May 5, 2017

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் அரசு, பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், பத்திர பதிவு கட்டணம் வெறும் ரூ.1 மட்டும்தான் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது அங்கு சொத்து பதிவு செய்ய 7 சதவீத பத்திர பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் ரகுபர்தாஸ் கூறுகையில், எங்களது இந்த அறிவிப்பின் மூலமாக பெண்களின் வளர்ச்சியில் மேம்பாடும், சமூக பாதுகாப்பும் கிடைக்கும். இந்த உத்தரவுக்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.100 கோடி வரை நிதி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Read More →

தவறாக நடக்கும் விமான பயணிகளுக்கு தடை

May 5, 2017

தவறாக நடக்கும் விமான பயணிகளை 3 மாதங்கள் முதல் 2 வருடம் வரை பயண தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. மத்திய அரசின் இச்சட்டத்திற்கு ஒரே நேரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. விமான பயணத்தின் போது தவறாக நடந்து கொண்டால் அந்த குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து 3 விதமான தடைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 3 மாதங்கள் முதல் முதல் வாழ்நாள் தடை வரை விதிக்கப்படும். முதல் நிலை வாய்மொழி துன்புறுத்தல், உடல்ரீதியான சைகைகள் போன்ற ஒழுங்கற்ற நடத்தைகளையும், இரண்டாம் நிலை அழுத்தம், உதைத்தல், முறைகேடான தொடுதல் போன்ற உடல் ஒழுங்கற்ற நடத்தையையும் உள்ளடக்கியுள்ளது.

Read More →

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய வழக்கில் ஜாமீன் மறுப்பு!

May 5, 2017

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சேகர் ரெட்டிக்கு உதவியதாக கைதான கொல்கத்தா தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 147 கோடி ரொக்கம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடான முறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

Read More →

தூக்கு தண்டனை எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி: நிர்பயா தந்தை

May 4, 2017

நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயா தந்தை, இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Read More →

பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத்தலைவராக தொடர வாய்ப்பு கிடைக்குமா?

May 4, 2017

குடியரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த பாஜக முன்வந்தால் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதேபோல் பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து யாரையும் நிறுத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »