Latest Posts
May 10, 2017
பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.
இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ஆர்டிஐ மனுதாரருக்கு தகவல் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கத் தூண்டிய விவரங்களை வெளியிடுவது நாட்டின் எதிர்கால கொள்கை, உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
Read More →May 9, 2017
வடகொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட விரும்பும் மூன் ஜயே-இனனை தென் கொரிய வாக்காளர்கள் அடுத்த அதிபராக ஒருமனதாக தெரிவு செய்யக்கூடும் என வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
மூன் 41.4 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் அவரது போட்டியாளர் ஹொங் ஜூன்-பியோ 23.3 சதவீதமே பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.
தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.
முன்னாள் தென் கொரிய அதிபர் ஊழல் மோசடியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முன்னரே அதிபர் தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று.
Read More →May 9, 2017
கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.
Read More →May 9, 2017
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை தெரிவித்தார்.
பின்னர், அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு அரசாங்க மருத்துவர்களைக் கொண்டு மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டதும் இப்பிரச்சனை மேலும் தீவிரமானது.
Read More →May 8, 2017
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.
இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் மக்ரான் 66 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார்.
Read More →May 8, 2017
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதனை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு நேரில் ஆஜராக அனுப்பிய சம்மனை கர்ணன் ஏற்காத நிலையில், நீதிமன்ற பணிகள் எதனையும் கர்ணன் செய்ய கூடாது என கடந்த பிப்ரவரி 8ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
Read More →May 8, 2017
தமிழக அரசு கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில், திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடைந்தது; கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது; சசிகலா சிறைவாசம்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சிறைவாசம் என அதிமுக அம்மா அணி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்து இல்லாமலே போய்விட்டது.
Read More →May 8, 2017
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். இவர், இன்று தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் வருமான வரித் துறை விசாரணை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளன.
Read More →May 8, 2017
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக மற்றொரு அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டினார். இதையடுத்துக் கபில் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் நீக்கினார்.
2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குச் சட்டமன்றத்தில் விளக்கமளிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கபில் மிஸ்ராவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது என்றும், உண்மையே இறுதியில் வெல்லும் என்றும் தெரிவித்தார்.
Read More →May 7, 2017
Read More →