இலங்கையில் தமிழர்களின் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடி உரை
இலங்கையில் தமிழர்களின் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடி உரை :
Read More →இலங்கையில் தமிழர்களின் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடி உரை :
Read More →அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்துள்ளார். ஹிலாரி கிளின்டன் இ-மெயில் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது. இதனை குறித்து குடியரசு கட்சியினர் பலரும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர், “டிரம்ப் – ரஷ்யா குறித்த புலனாய்வில் கோமி எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று வாதிடுகின்றனர். 2013 -ல் ஜேம்ஸ் கோமி அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவினால் உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். 2016 அதிபர் தேர்தலின் போது, ஜேம்ஸ் கோமியின் சில அறிவிப்புக்களினாலேயே தான் அதிபராக இயலவில்லை என்று அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் அவ்வப்போது குற்றம்சாட்டியிருந்தார்.
Read More →மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டின.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜவுக்கே வாக்குகள் விழும் வகையில் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
Read More →முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது ஒரு முக்கியமான வழக்காக இருப்பதால் இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முத்தலாக் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் 5 தனி ரிட் மனுக்களை தாக்கல் செய்தார். இது தவிர மேலும் 2 மனுக்கள் வெவ்வேறு நபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில், நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்டவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முத்தலாக் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தது.
Read More →ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலையில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான முழு வீச்சில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன. இதுதொடர்பாக பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை, சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர்.
Read More →தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே பதவியேற்று கொண்டார். அதிபராக அவர் ஆற்றிய முதல் உரையில், வட கொரியாவுடனான பொருளாதார மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மூன் ஜே தீர்க்கமான வெற்றியை பெற்றதையடுத்து அதற்கு மறுநாள் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டட அலுவலகத்தில் தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார். முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான மூன் ஜே, வட கொரிய அகதிகளின் மகன் ஆவார்.
Read More →பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 12ம் தேதி வெளியிடப்படும். பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். தேர்வு முடிவு வெளியான 10 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
Read More →தன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார். வேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Read More →நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ”இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இது பாரபட்சப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழியில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Read More →