Latest Posts
May 16, 2017
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
Read More →May 16, 2017
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர் களின் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டம் தீவிரமடைந்துள் ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More →May 14, 2017
கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணைய தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரான ”மால்வேர் டெக்” என்பவர், ”மற்றொரு இணைய தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமையன்று தாக்கலாம்” என்று எச்சரித்துள்ளார். ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.
கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.
Read More →May 14, 2017
வட கொரியா தனது மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகிலிருந்து பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வட மேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், 700 கிலோ மீட்டர் தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தென் கொரியா கூறியுள்ளது.
வட கொரியா தொடர்ச்சியான பல ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச கண்டனங்கள் மற்றும் அமெரிக்கவுடனான உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த சமீபத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.
Read More →May 13, 2017
பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த நிலையில், தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க ராஜபக்சே அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானின் கராச்சியை நோக்கி செல்லவிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை முன்செலுத்த வேண்டும் என முயற்சிக்கும் சீனாவின் நகர்வுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கிறது.
Read More →May 13, 2017
சென்னை மாநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆணையராக இருந்த கரண் சின்கா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்க்காவல் படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக துணை ஆணையராக எஸ்.சரவணன் நியமனம். மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகவுரி நியமனம். ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக ஏடிஜிபியாக எம்.ரவி நியமனம்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →May 13, 2017
காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மஞ்சகோட் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவத்தில் தொடர் தாக்குததால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Read More →May 13, 2017
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்துள்ளர். பேட்டி அளித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Read More →May 13, 2017
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாணவ-மாணவிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வெளியான அடுத்த சில நொடிகளில், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் ஏற்கெனவே அளித்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
Read More →May 13, 2017
உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.
பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.
பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.
Read More →