Latest Posts
May 18, 2017
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ததார். இதற்கு பல்வேறு அரசியல் தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.
Read More →May 18, 2017
சென்னையில் ஒரு கடையிலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என தெரிகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்காரியா காலனியில் ராமலிங்கம் அண்ட் கோ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்புகளுக்கு உடைகளை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்தக் கடையில் பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று காலையில் கோடம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அந்தக் கடையைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் இந்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பெட்டிபெட்டியாக கண்டெடுக்கப்பட்டன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் பல கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது.
Read More →May 18, 2017
சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க இல்லை என தெரிவித்துள்ளது.
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் மேலும் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
Read More →May 18, 2017
அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.
கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.
டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.
Read More →May 17, 2017
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணிக்கு முடிந்தது.
ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
”மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர்(ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐஎன்எக்ஸ் மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு(எப்ஐபிபி) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.
Read More →May 17, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர் வரும் 19 திகதி முதல் மீண்டும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பான மாலத்திவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி துன் லாய் மார்கு இதனை தெரிவித்தார்.
ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் நிலவிய மோசமான மனித உறிமை மீறல்கள் காரணமாகவே இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டது..
ஊடக சந்திப்பில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த துன் லாய் மார்கு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்காகவே ஜி.
Read More →May 17, 2017
ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது “முற்றிலும் சரி” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
“பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்” ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.
விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வாஷிங்டன் போஸ்ட்` தெரிவித்துள்ளது.
Read More →May 17, 2017
தமிழக அரசுக்கும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாட்டை உருவாக்க வேண்டும், ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.
தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்திற்கான பேருந்துகளை பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களே இயக்கிவருவதால், இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இயல் புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
Read More →May 16, 2017
பிரான்சின் புதிய அதிபர் இமான்வெல் மக்ரோங், தனது புதிய அரசியல் இயக்கத்திலிருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தாமல், மத்திய-வலதுசாரி அரசியல்வாதியின் பெயரை அறிவித்திருக்கிறார்.
தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட, வடமேற்கு துறைமுகமான லே ஹேவ்ரேயின் மேயரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்டு பிலிப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்ரோங், சில காலத்திற்கு முன்பு தொடங்கிய “லா ரிபப்ளிக் என் மார்சே” கட்சிக்கு, பிற குடியரசு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாக்களிக்க இந்த முடிவு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோங்கின் புதிய கட்சி, சிறப்பான வெற்றி பெறவேண்டும்.
Read More →May 16, 2017
உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும்.
இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெறாதது ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை அமைப்பான யூரோபோல் தெரிவித்திருக்கிறது.
எனது கணினி பாதிக்கப்பட்டுள்ளதா?
வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது.
விண்டோஸ் இயங்குத்தளம் வழங்குகின்ற மென்பொருட்களின் மேம்பாடுகளை பயன்படுத்தாமலோ, மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கின்றபோது கவனமாக இல்லாமலோ இருந்தால் நீங்களும் பாதிப்படையும் ஆபத்து நிலவுகிறது.
Read More →