Latest Posts

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

Jun 5, 2017

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார் கூறியதாவது : கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க வேண்டும். தினகரனுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை- அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கிவைத்து ஆட்சி நன்றாக நடந்து வருகிறது.

Read More →

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Jun 5, 2017

இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது. மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இதுகுறித்து, “மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும்.

Read More →

மணிலா தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் வேலையல்ல : பிலிப்பின்ஸ் அதிபர்

Jun 5, 2017

மணிலா சூதாட்டக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வேலையல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் 40 பேர் இறந்தனர். முன்னதாக அந்தத் தாக்குதலுக்கு ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடச் செல்லவிருப்பதாகத் தெரிவித்த திரு. டுடார்ட்டே, அது ஐ. எஸ். பயங்கரவாதிகளின் செயல் அல்ல என்பது தமக்குத் தெரியும் என்றார். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 40 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார் என்ற விபரத்தை மணிலா போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.

Read More →

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது

Jun 5, 2017

லண்டன் பாலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குப் பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்துள்ள பிரதமர் தெரீசா மே “இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது” என்று கூறியுள்ளார்.

Read More →

ஐசிசி சாம்பியன் டிரோபி : பாகிஸ்தானை வென்றது இந்தியா

Jun 5, 2017

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50, முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர்.

Read More →

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல்

Jun 5, 2017

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

Read More →

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி : இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

Jun 4, 2017

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது. இந்திய அணி 9.5 ஒவர்கல் முடிவில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தது. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More →

மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

Jun 4, 2017

“மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்; எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்து பாடம் கற்க உங்கள் வாழ்நாள் போதாது.” – சாணக்கியர் “Learn from the mistakes of others, you can’t live long enough to make them all yourselves !” – Chanakya

Read More →

லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து

Jun 4, 2017

மத்திய லண்டனில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீது மோதியது மற்றும் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவத்திற்குப் பின்னர் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் மரணம் அடைந்தனர் என்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரசா மே இச்சம்பவம் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றார். ஆயுதம் தாங்கிய போலீசார் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வாக்ஸ்ஹால் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டனர். மேலும் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் மற்றொரு தாக்குதல் சம்பவத்தையும் எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர். லண்டன் பாலத்தில் தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் ஆறு பேர் மீது ஒரு வேன் மோதியதாகத் தெரிவித்தார்.

Read More →

கருணாநிதி வைர விழா : ராகுல் காந்தி, தமிழக, ஜார்கண்ட் கவர்னர்கள் வாழ்த்து

Jun 3, 2017

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும், அவர் சட்டசபையில் 60 ஆண்டுகாலம் பணியாற்றியதை கொண்டாடும் வைர விழா ஆகியவற்றை இணைந்து, சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று திமுக சார்பில் விழா நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஜார்கண்ட் கவர்னர் மர்மு மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், கலைஞர் நீடுழி வாழ வேண்டும். இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வேண்டும். அனைத்து மக்களின் துயரங்களையும் அறிந்து வைத்துள்ளவர் கலைஞர். தமிழக மக்கள் கலைஞரை ஆழமாக நேசிக்கின்றனர். சட்டபேரவை தேர்தலில் தோல்வியை கண்டிராதவர் என்று கூறினார்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »