Latest Posts

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி

Jun 6, 2017

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை, மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில், ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

Read More →

மத்திய பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தில் போலிஸார் சுட்டு 5 பேர் பலி

Jun 6, 2017

பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சுர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் சுட்டதில் ஐந்து விவசாயிகள் பலியாகினர், பலர் காயமடைந்தனர். மன்சுர் மாவட்டத்தில் அதிகமாக வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தற்கொலைகள் இங்கு அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததால் கோபமடைந்த விவசாயிகள், பொலிஸ் நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தியதுடன், பல பாதுகாப்பு படையினரை தாக்கினர். மாநில நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு படையினரை விரைந்து கொண்டுவந்தது. மேலும் சமூக ஊடக வதந்திகளால் வன்முறைக்கு விரோதமாக தலையிடுவதை தடுக்க இணைய சேவைகளை திரும்பப் பெற்றது. இரண்டு தனித்தனி சம்பவங்களில் ஐந்து பேர் இறந்ததாக உள்துறை அமைச்சர் புபீந்திர சிங் தெரிவித்தார்.

Read More →

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்

Jun 6, 2017

நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னர் திமுகவில் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார். அவர் சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.  

Read More →

மாட்டிறைச்சிக்கு தடை : மேகாலயா பாஜக தலைவர்கள் விலகல்

Jun 6, 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என மத்திய பாஜக அரசு தடை விதித்ததை கண்டித்து மேகாலயாவில் உள்ள பாஜக தலைவர்கள் இருவர் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் கேரளா, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மாட்டிறைச்சி திருவிழா என்ற பெயரில் பொது இடங்களில் மாட்டிறைச்சி சமைத்து உண்டு அவர்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து அரசு மறுபரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

Read More →

அதிமுகவில் பரபரப்பு : தினகரனுடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Jun 6, 2017

அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என்ற இரு பிரிவாக இருந்த அதிமுகவில், இப்போது தினகரன் அணி என்ற மூன்றாவது அணியும் உருவாகும் நிலையில் இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Read More →

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

Jun 6, 2017

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த திவ்யா குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் திவ்யா கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் தானாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலை செய்த குழந்தைகளை அவசரஅவசரமாக மண்ணில் புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

Read More →

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் பணம் பறிக்க முயற்சி

Jun 6, 2017

கடந்தாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட தமிழரான மாரியப்பன் தங்கவேலுவை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று மாரியப்பன் புகார் கூறியுள்ளார். ஓமலூர் பெரியகடம்பபட்டியில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து மாரியப்பனின் காரை இடித்த சதீஷ் என்ற வாலிபர் மரணம் அடைந்ததால். சதீஷின் மரணத்துக்கு மாரியப்பன் தான் காரணம் எனக்கூறி மாரியப்பனிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். சதீஷ் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து தனது காரில் மோதியதில் கார் சேதமடைந்துள்ளதாக தான் முன்னரே புகார் அளித்திருப்பதாகவும். சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார்.

Read More →

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

Jun 5, 2017

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை பிடிக்கப்பட்ட 143 படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். படகுகளை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழக அரசுக்கு சொந்தமான 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட 145 படகுகளில், வெறும் 42 படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More →

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி - MkIII செயற்கைகோள் ஜிசாட் - 19 ஐ விண்ணில் செலுத்தியது

Jun 5, 2017

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. “ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

Read More →

கத்தாருடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

Jun 5, 2017

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது. இதனை ‘நேர்மையற்ற’ முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு ‘எந்த அடிப்படையும் இல்லை’ என்கிறது. அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »