Latest Posts
Jun 7, 2017
மியான்மரில் 104 பேருடன் காணாமல் போனதாக கூறப்பட்ட ராணுவ விமானம் தற்போது கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இன்று காலை 90 வீரர்கள் மற்றும் 14 விமான ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் ஒன்று தெற்கில் உள்ள மியெய்க் நகரத்தில் இருந்து யாங்கூன் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, சர்வதேச நேரத்தின்படி இன்று காலை 7.05 மணிக்கு அந்த விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. தவேய் நகருக்கு 20 கி.மீ மேற்கில் இந்த விமானம் மாயமானது.
தற்போது இந்த விமானத்தை தேடி வருவதாக ராணுவ தளபதி தெரிவித்திருந்தார்.
Read More →Jun 7, 2017
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். அங்கு நுழைந்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. “ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு வீரரின் காலில் குண்டு பாய்ந்தது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஈரான் புரட்சியாளர் அயதுல்லா ருஹல்லா கொமெய்னியின் வழிபாட்டுத்தலத்திலும் ஆயுதம் ஏந்திய நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More →Jun 7, 2017
நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கர்ணன் சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி கர்ணனுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு 1 மாதம் ஆகப் போகிறது. இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More →Jun 6, 2017
லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வேன் தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வைத்து நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர்.
48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில் லண்டன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவரின் பெயர் குரம் ஷசாட் பட் (Khuram Shazad Butt) மற்றொருவரின் பெயர் ராஷித் ரெடூவன் (Rachid Redouane) இருவரும் லண்டனில் தான் வசித்து வந்துள்ளனர்.
Read More →Jun 6, 2017
கூகுளின் மொபைல் இயக்க முறைமை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. தற்போது அண்ட்ராய்டு ஓ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருவதனை ஒட்டி ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Read More →Jun 6, 2017
நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம்.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இந்திய வழி பேராசிரியரான அசோக் வெங்கடராமன் மார்பக புற்றுநோய் மரபணுவான பி.
Read More →Jun 6, 2017
வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும். சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும். வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும். வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவிவந்தால் மூட்டுவலி நீங்கும்.
Read More →Jun 6, 2017
நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது.
செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும். செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.
Read More →Jun 6, 2017
‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.
Read More →Jun 6, 2017
ஆப்கானிஸ்தான் ஹெரட் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் படுகாயம் காயமடைந்தனர்.
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர். இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானின் மற்றொரு பெரிய நகரமான ஹெரடில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
Read More →