Latest Posts
Jun 11, 2017
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை பனிலிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்தாண்டிற்கான, அமர்நாத் யாத்ரா, ஜூன் 29 ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டிய ஊடுருவலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அங்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Read More →Jun 11, 2017
எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல் என தமிழக அரசு மீது மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அமைப்பது குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதார அமைச்ச கம் 10 கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு பதில் அனுப்பாமல் நீண்ட நாள்களாக தாமதம் செய்து வந்த தமிழக அரசு கடந்த 5.5.2017-ம் தேதி சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மூலமாக, 10 கேள்விகளுக்கு பதில் தயார் செய்து அறிக்கை அனுப்பி உள்ளது. அந்த மதிப்பீட்டு அறிக்கையில் தஞ்சாவூர் செங்கிபட்டியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக் கலாம் என பரிந்துரை செய்துள்ளார்.
Read More →Jun 11, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.
Read More →Jun 11, 2017
“ஒரு காரியத்தைத் துவங்கியபின், தோற்றுவிடுவோம் என அஞ்சி அதை விட்டுவிட வேண்டாம். நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.”
– சாணக்கியர்
Once you start working on something, don’t be afraid of failure and don’t abandon it. People who work sincerely are the happiest.
-Chanakya
Read More →Jun 11, 2017
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் படகு கவிழந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார்.
மாயமான மற்ற இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் பெஞ்சமின் மற்றும் தாசன் ஆகியோரது உடல்கள் குளச்சல் பகுதியில் கரை ஒதுங்கியது.
Read More →Jun 11, 2017
திருப்பதி கோவிலில் லட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசையில் நிற்கின்றனரோ அதே போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.
இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குளறுபடிகள் இல்லாமல், பக்தர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக தரிசன டிக்கெட், பிரசாதங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
Read More →Jun 11, 2017
டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.
இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.
கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.
Read More →Jun 11, 2017
கத்தார் மீது பிற அரபு நாடுகள் தடை விதித்தபோது, அது குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அந்நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதனிடையே அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ”தலைமைத்துவத்தை” பாராட்டியிருக்கிறது.
கத்தார் ”மற்றவர்களைக் கொல்ல மக்களுக்கு பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
கத்தார் ”மற்ற ஒற்றுமையான நாடுகளின் மத்தியில்” மீண்டும் வரவேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க, சின்னஞ்சிறிய நாடான, கத்தார், தான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறப்படுவதை பலமாக மறுக்கிறது.
Read More →Jun 11, 2017
பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் “காந்தி ஒரு சாதுர்யமான வியாபாரி” என்று தெரிவித்துள்ள கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தியின் பேரரான கோபால் கிருஷ்ண காந்தி அதுபற்றி கூறுகையில், “இது கேட்க சகிக்காத, குறும்புத் தனமான பேச்சு” என்றார்.
மகாத்மாவின் இன்னொரு பேரரான ராஜ்மோகன் காந்தி, “பிரிட்டிஷ் சிங்கத்தையும், இந்தியாவில் இனவாத விஷப் பாம்புகளையும் வென்ற மனிதர், ‘ஒரு சாதுரியமான வியாபாரி’யை விடவும் உயர்ந்தவர்” என்றார்.
“அமித் ஷாவின் கருத்து, சுதந்திரப்போராட்ட வீரர்கள், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் மகாத்மா காந்தி மீது அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
Read More →Jun 11, 2017
பல்வேறு தரப்புகளில் இருந்து வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவும் இன்னமும் வரி நிர்ணயம் செய்யப்படாத பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்யவும், ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று கூடுகிறது.
ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஒற்றைச்சாளர முறையில் வரிவிதிப்பதற்காக, எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை நிர்ணயிக்க 15 சுற்றுகளாக ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், இறுதிச்சுற்று ஆலோசனைக்கூட்டம் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ தலைமையில் டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது.
Read More →