Latest Posts
Jun 12, 2017
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வின் (NEET) முடிவுகளை ஜூன் 26 அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை திங்கள்கிழமை (ஜூன் 12) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.
Read More →Jun 12, 2017
பருவநிலை மாற்றத்தை (Climate change) எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.நிறம் தரக்கூடிய பாசி உருவாவதை தடுக்கின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறதுஇயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று நேச்சர் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.உடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More →Jun 12, 2017
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவல் மேக்ரான் சென்ற மாத்ம் வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றார். தற்போது 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது.
நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. இந்த தேர்தலில் அதிபர் இமானுவல் மேக்ரானின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரான் கட்சி வெற்றி பெற்று விட்டது. இதே நிலைதான் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் எமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.
Read More →Jun 11, 2017
ஈழத்தமிழர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read More →Jun 11, 2017
உலகின் அதிவேக மனிதராக 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசேன் போல்ட், சொந்த மண்ணில் பங்கேற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அபாரமாக வென்று அசத்தினார். 2008 – ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை வீரராக படைத்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் , சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். லண்டனில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரே அவரது கடைசி போட்டியாக இருக்கும்.
Read More →Jun 11, 2017
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் ((2005 -08, 2010-14, 2017) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
Read More →Jun 11, 2017
நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், 2வது தோல்வியடைந்தார் . இவர், நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் வீழ்ந்தார்.
‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், ஸ்டாவன்ஜர் நகரில் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 33வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். முன்னதாக 2வது சுற்றில் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் வீழ்ந்தார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் நகமுரா (எதிர்- வாசியர் லாக்ரேவ்), ஆர்மேனியாவின் ஆரோனியன் (எதிர்- கார்ல்சன்) வெற்றி பெற்றனர்.
Read More →Jun 11, 2017
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது.
டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.
ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More →Jun 11, 2017
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது இந்தியா 10 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் விகிதப்படி, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
Read More →Jun 11, 2017
நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் சீனாவில் தற்போது வரை சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Read More →