Latest Posts

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர்

Jun 14, 2017

மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More →

Ramana Movie

Jun 14, 2017

Read More →

Soori Comedy

Jun 14, 2017

Read More →

1 மருந்து ஒரே மருந்து எல்லா வியாதியூம் குணமகனும் - Comedy

Jun 14, 2017

Read More →

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி

Jun 14, 2017

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். கடந்த 2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். இவர் பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011-ல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Read More →

ஜி.எஸ்.டி., சான்று பெற கைகொடுக்கிறது மொபைல் போன்

Jun 14, 2017

ஜி.எஸ்.டி., பதிவுக்காக, வலைதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான சான்று கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக நிறுவனங்களும், வர்த்தகர்களும் தெரிவித்து உள்ளனர்.இப்பிரச்னை குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் கையொப்பம் மூலம் பதிவு சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், வங்கி விபரங்களை அளித்து பெறலாம் அல்லது மொபைல் போன் மூலம் கடவுச் சொல் பெற்றும் சான்று பெறலாம். ஜி.எஸ்.டி.,க்கு விண்ணப்பிப்போர் பான் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வர்த்தகம் நடைபெறும் மாநிலம் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும்.பான் கார்டு விபரங்களை, மத்திய நேரடி வரிகள் வாரியம் பரிசீலிக்கும். விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணில், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அனுப்பப்படும்.

Read More →

ரஷ்யாவுடன் இணக்கம் என்பது பொய்; கோமியின் பதவி நீக்கம் சரிதான்: ஜெஃப் செஷன்ஸ்

Jun 14, 2017

அமெரிக்க பெடரல் அட்டார்ணி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் இன்று செனட்டில் சாட்சியம் அளிக்கையில், 2016 தேர்தலின் போது அவர் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்று எதிர்கட்சியும் ஊடகங்களும் சொல்வது கொடுரமான, வெறுக்கத்தக்க பொய் என்று கூறினார். மேலும், எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்த விஷயத்தில் தனது பங்களிப்பு மிகவும் சரியானதே என்றார். மேலும் அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம் கூறியதாவது : எந்தவொரு ரஷ்யருடனோ அல்லது எந்த வெளிநாட்டு அதிகாரிகளுடனோ நான் தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது தேர்தலிலோ தலையீடு குறித்து எந்த உரையாடலையும் நடத்தவில்லை. டிரம்ப்-ன் பிரச்சாரக் குழுவைச் சார்ந்த எவரும் இது குறித்து ஏதேனும் உரையாடல் நடத்தினார்களா என்றும் எனக்குத் தெரியாது.

Read More →

விஜய் மல்லையா : அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்

Jun 14, 2017

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, தற்போது லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா இன்று லண்டனிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், தொடர்ந்து மறுப்பேன். நான் எந்த நீதிமன்ற விசாரணையிலிருந்தும் நழுவவில்லை, என்னுடைய தரப்புக்கான நியாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் ஊடகங்களிடம் இது பற்றி எதுவும் தெரிவிக்கப்போவதில்லை, காரணம் நான் எதைக்கூறினாலும் திரிக்கப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் உள்ளன அது பேசும். எந்தக் கடன்களும் எங்கும் திசைத்திருப்பப் படவில்லை. நீங்கள் பில்லியன் பவுண்டுகள் குறித்து கனவு கண்டு கொண்டேயிருங்கள், ஆதாரமில்லாமல் உங்களால் எதையும் நிரூபிக்க முடியாது.

Read More →

காஷ்மீரில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் : பாதுகாப்பு படையினர் பலர் காயம்

Jun 14, 2017

காஷ்மீரில் 4 மணி நேரத்தினுள் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 13 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் வடக்குக் காஷ்மீரில் 5 தாக்குதல்களையும் தெற்கு காஷ்மீரில் ஒரு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

Read More →

நலம் தரும் மூலிகைகள் : 1 - புதினா & எகினெசியா

Jun 13, 2017

மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது. இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம். 1) புதினா   புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற முடியும். புதினா செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஆவிபிடிப்பதால் இழுப்பு, ஆஸ்த்மா, லாரிஞ்சைட்டிஸ் போன்ற நோய் உடையவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யலாம்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »