Latest Posts

அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் அதிரடி சோதனை

Jun 19, 2017

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர்களின் சேவைத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.அரசு தீவிரம்இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களில், சேவையில் மெத்தனம் காட்டுபவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Read More →

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை

Jun 19, 2017

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, வேறெந்த தனி நபரின் பெயரையோ குறிப்பிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More →

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

Jun 18, 2017

நீரிழிவு நோய் நமக்கு இருப்பதாகத் தெரிந்தால், சில வாழ்வுமுறை மாற்றங்களை மேற்கொள்வதுடன் அவ்வப்போது டாக்டரைக் கலந்தாலோசித்து செயல்பட்டால், இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். 1) ஆரோக்கியமான உணவைத் தெரிந்தெடுத்து உண்ணுதல் i)சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைக் குறைக்கவும். ii)கார்போஹைடிரேட் சர்க்கரையாக மாறும் என்பதால் அதன் அளவை கவனிக்கவும். iii)நீங்கள் இன்சுலின் அல்லது சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்து எடுப்பதாக இருந்தாலும், உணவில் கவனமாக இருப்பது மிக முக்கியம். 2)தவறாமல் மருத்துவ சோதனைகளைச் செய்தல் 3)உடற்பயிற்சி 4)மன அழுத்தத்தை குறையுங்கள் 5) புகைப்பதை நிறுத்துங்கள்; மதுவை கட்டுக்குள் வைத்திருங்கள் ஆல்கஹால் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்கவோ அல்லது மிகவும் குறைவாக ஆக்கவோ செய்யலாம்.

Read More →

முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் : டிஎன்ஏ மூத்த தலைவர்

Jun 18, 2017

முதல்வர் பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பார் என்று இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மூத்த தலைவர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக அறியப்படுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார் குறித்து விசாரிப்பதற்காக முதல்வர் விக்னேஸ்வரன் அமைத்த குழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் 2 அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதில் தீர்மானம் ஒன்றை 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Read More →

தடங்கலுக்கு வருந்துகிறோம்

Jun 18, 2017

எமது இணையதளம் சேவை வழங்குநரால் தடுக்கும் பராமரிப்பு மற்றும் ஹார்ட்வேர் மேம்படுத்தல் (Preventive Maintenance and Hardware upgrade) பணிகளால் சில மணி நேரங்களுக்கு இயங்கவில்லை. தற்போது thenthidal.com மீண்டும் வழக்கம் போல இயங்குகிறது. -Admin

Read More →

டார்ஜீலிங்கில் கலவரம்: ஒருவர் பலி; 36 பேர் படுகாயம்

Jun 18, 2017

டார்ஜீலிங்கில் ஜூன் 9 ம் திகதி தொடங்கிய தனி மாநில கோரிக்கையைத் தொடர்ந்து நடைபெறும் வன்முறையின் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM)-வினருக்கும் நடந்த மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 36 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM) தலைவர்கள் தங்கள் தரப்பில் 3 பேர் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரின் போராட்டங்கள் “வடகிழக்கு மற்றும் சில வெளிநாட்டு நாடுகளின் கிளர்ச்சி குழுக்கள் ஆதரவுடன் ஆழமான வேரூன்றி சதி வேலை” என்று கூறினார். வெள்ளிக்கிழமை இரவு ஜி.ஜே.எம் இன் உதவி பொது செயலாளரான பினய் தமங் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதுடன், டார்ஜீலிங்கைச் சேர்ந்த ஜி.

Read More →

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி: இன்று இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பல் தோல்வி

Jun 18, 2017

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் – 338 ரன்கள் (4 விக்கட்) இந்தியா – 158 ரன்களுடன் ஆல் அவுட் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 265 ரன்கள் பெற்றுள்ளது. எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதில் கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணி வீரர்களும் முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர்.

Read More →

பெங்களூரு நகரின் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

Jun 18, 2017

பெங்களூரு நகரின் முழுமையான புதிய மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கட்டுமானம் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. நகரில் உள்ள 4 திசைகளையும் இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 18.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிழக்கு-மேற்கு திசையில் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பாதை அமைக்கப்பட்டு, அதில் கடந்த ஆண்டு முழுமையான சேவை தொடங்கப்பட்டது. அதே போல் 24.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்கு-தெற்கு திசையில் நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை பாதை அமைக்கும் பணிகள் தற்போது தான் முடிந்தது. இதில் நாகச்சந்திரா-சம்பிகே ரோடு இடையே பாதை அமைக்கப்பட்டு அதில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

Read More →

லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி

Jun 18, 2017

லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது : நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த 3 தீவிரவாத தாக்குதல்களின் துக்கம் மறைவதற்குள், சென்ற புதன்கிழமை இந்த 24 மாடிக் கட்டிட தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

Read More →

இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு அழைப்பில் ரஜினி பெயர் இல்லை

Jun 17, 2017

ரஜினிகாந்த் – கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார். கமல் ஹாஸன் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும், அவரை பண்பட்ட நடிகனாக உருவாக்கிய பெருமை கே.பாலச்சந்தருக்குத்தான் சேரும். இந்நிலையில் பாலச்சந்தருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவரின் பிறந்த நாளான ஜூலை 9-ம் தேதி வெண்கலச் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலச்சந்தருக்கு புகழுரை வழங்கி பேசுகின்றனர்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »