Latest Posts

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் - மார்டினுடன் டாடா போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம்

Jun 21, 2017

இந்தியாவில் ஃஎப் 16 ரக போர் விமானங்களை தயாரிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் டாடா அட்வாண்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை வெல்ல ஃபோர்ட் வொர்த் டெக்சாஸ் ஆலை திட்டமிட்டுள்ளது. இந்திய ராணுவம் வசம் உள்ள சோவியத் சகாப்த விமானங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதனால் இ ந்திய விமானபடைக்கு நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தேவைப்படுகிறது. ராணுவ தளவாட பொருட்களை வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு பங்குதாரருடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் நோக்கத்தோடு ராணுவ தளவாட பொருட்கள் இறக்குமதியை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

Read More →

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல்: தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்

Jun 21, 2017

பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகர ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி, ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார். இதன் நிமித்தம் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையம் ஜூன் 20-அன்று உள்ளூர் நேரப்படி மாலை 8:49 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு வெடிப்பு நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததாக தெரிகிறது. முன்னதாக 30 – 35 வயது இளைஞர் ஒருவர் “அல்லாஹூ அக்பர்” என்று கோஷமிட்டவாறு தனது பயணபெட்டியிலிருந்து எதையோ வெடிக்கச் செய்ய முயன்றதாக கூறப்பட்டது.

Read More →

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகல்

Jun 20, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, இன்று கும்ப்ளே பதவி விலகினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லவில்லை. சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியபோது கோஹ்லி நேரில் ஆஜராகி, கும்ப்ளே குறித்து புகார் கூறினார். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிபோட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தைஅடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. கும்ப்ளேவை மாற்றியே தீரவேண்டும் என்பதில் கோஹ்லி பிடிவாதமாக இருந்தார்.

Read More →

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதானார்

Jun 20, 2017

உச்ச நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், இன்று கோவையில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

Read More →

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டம்: கோடீஸ்வரர் இலான் மஸ்க் வெளியிட்டார்

Jun 20, 2017

கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். “மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார். இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).

Read More →

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

Jun 20, 2017

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார். இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது : பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள முடியும். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் கூறுகையில், “ஓட்டோ வார்ம்பியர் அநியாயமாக சிறையில் அடக்கப்பட்டதற்கு அமெரிக்கா, வட கொரியாவையே பொறுப்பாளியாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

Read More →

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

Jun 19, 2017

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவர் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் தெரியவந்துள்ளது. வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார். இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று லண்டன் காவல் துறை தலைவர் கிரெஸ்ஸிடியா டிக் தெரிவித்தார். மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அதிகரிக்கப்படும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கானும் தெரிவித்துள்ளனர்.

Read More →

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

Jun 19, 2017

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார்.

Read More →

போர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

Jun 19, 2017

மத்திய போர்ச்சுகல் கோயம்பிராவிற்கு அருகில் காட்டுத்தீயானது கடுமையாக பரவியதால் 61 பேர் இதுவரை இறந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர். “இந்த காட்டுத்தீ சமீபத்திய ஆண்டுகளின் மிகப்பெரிய சோகமான நிகழ்வாகும் ” என அதிகாரிகள் விவரித்துள்ளனர். இக்காட்டுத்தீ மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர். மூன்று நாட்களுக்கு போர்த்துக்கல் அரசாங்கம் துக்கம் அனுசரிக்க உள்ளது.

Read More →

உலக ஹாக்கி லீகில் இந்தியா பாகிஸ்தானை வென்றது

Jun 19, 2017

உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவை எதிர்கொண்டது. இதில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »