Latest Posts

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

Jul 1, 2017

அமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில் அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும், நாசா அதற்கு அமைதியாக, அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது. வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது : செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின், அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை.

Read More →

குட்கா லஞ்சம் விவகாரம்: தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

Jul 1, 2017

சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை அனுப்பி வைத்த ஆவணங்களை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதும், இதற்காக ஒரு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.

Read More →

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

Jun 30, 2017

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர். நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.

Read More →

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் நிச்சயமாக இறந்து விட்டார் : ஈரானிய ஊடகங்கள்

Jun 30, 2017

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நிச்சயமாக இறந்துவிட்டார் என்று மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உறுதியாகக் கூறியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இராக்கின் அரசு பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஈரானின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Read More →

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது

Jun 30, 2017

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும். இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More →

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

Jun 30, 2017

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

Read More →

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

Jun 29, 2017

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் 42 வயது ஆன அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாருதி வேன் ஒன்றில் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது அதில் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சிலர் வதந்தி பரப்பியதையடுத்து, வேனை தாக்கிய பசு பாதுகாப்பு தீவிரவாத கும்பல், வேனை தீயிட்டு கொளுத்தியது.

Read More →

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

Jun 29, 2017

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன்சிங். சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்து படம் பிடித்தார். அந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அமைச்சர் ராதாமோகன், பிபாரா அருகிலுள்ள நெடுஞ்சாலை -28 இல் நீண்ட தூரத்திற்கு கழிப்பிடன் எதுவும் இருக்கவில்லை, என்று தனது செய்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

Read More →

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

Jun 29, 2017

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது, பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார். நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுக் காவலர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

Read More →

‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த்

Jun 29, 2017

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி ஆகியவற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அடுத்தடுத்து 2 பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் நேற்று ஐதராபாத் திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உலக தர வரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் 24 வயதான ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:- உலக தர வரிசையில் ‘டாப்-10’-க்குள் வருவது என்பது நல்ல விஷயமாகும். ஆனால் டாப்-10 வரிசைக்குள் வர வேண்டும் என்பதற்காக நான் இந்த போட்டிகளில் விளையாடவில்லை.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »