Latest Posts
Jul 2, 2017
தென்னமெரிக்கா நாடான சிலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள் பதிவாகியிர்ந்தனர். இவ்வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அவ்வீடியோவில், ஆப்ரேஷன் தியேட்டரில் நினைவிழந்த நிலையில் நோயாளி ஒருவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரின் இருபுறத்திலும் நிற்கும் மருத்துவர்கள் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கிருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் கால்பந்து போட்டி ஒளிபரப்பாகியது. அப்போது, கால்பந்து வீரர் கோல் அடிக்கும் தருணத்தை ஆப்ரேஷன் செய்வதை நிறுத்தி விட்டு மருத்துவர்கள் திரும்பி பார்க்கிறார்கள்.
அருகில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் போட்டியை துள்ளி குதித்து கண்டுகளிப்பது போல வீடியோவில் உள்ளது. வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More →Jul 2, 2017
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை கோர்ட்டு உத்தரவுப்படி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரை மணி நேரம் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முருகன் அடைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையில் இருந்து 2 செல்போன், 3 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் கோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Read More →Jul 2, 2017
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும் டைரக்டருமான டி. ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார். சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன் அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார். சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.
Read More →Jul 2, 2017
ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.
Read More →Jul 2, 2017
பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த். இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.
அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More →Jul 2, 2017
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள செய்தி :
“ஒரே நாடு ஒரு வரி என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு, சேவை வரி விதிப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தற்போது உள்ள வரி விதிப்பு வித்தியாசங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அது முடியாத பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு பெரிய அழுத்தமாகவே இந்த சரக்கு சேவை வரி அமையும். சினிமா மீது விதிக்கப் படும் இந்த வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.”
Read More →Jul 1, 2017
புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.
இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.
Read More →Jul 1, 2017
“மிகப்பெரிய குரு மந்திரம்: உன் இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்றமுடியாத உன் இரகசியத்தை, மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.”
– சாணக்கியர்
The biggest guru-mantra is: Never share your secrets with any body. If you cannot keep a secret with you, do not expect that others will keep it? It will destroy you.
-Chanakya
Read More →Jul 1, 2017
இன்று (ஜூலை 1) கனடாவின் 150-வது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஆட்டவா-வில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சுமார் 500,000 பார்வையாளர்கள் பார்லிமென்ட் ஹில்லில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கனேடிய அரசு இக்கொண்டாட்டங்களுக்காக அரை-பில்லியன் கனேடிய டாலர்களை செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய மேப்பிள் லீஃப் கொடி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மலர்ந்துள்ளது. 38 மில்லியன் மக்கள் உலகின் இரண்டாவது பெரிய நாட்டின் பெருமையை காட்டுகின்றனர்.
ஆயினும் எல்லோரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. கனடாவின் சில சுதேசிய மக்கள் காலனியாதிக்கம் மற்றும் அடக்குமுறை முதலிய காரணங்களால் தாம் கனடா தினத்தைக் கொண்டாடப்போவதில்லை என்கின்றனர்.
Read More →Jul 1, 2017
இறக்கும் நிலையில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.
இறக்கும் நிலையில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களிடம் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து உள்ளனர்.
Read More →