Latest Posts
Jul 4, 2017
மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் உலகளாவிய விற்பனைப் பிரிவை மறுசீரமைத்தது, தனித்தனி மென்பொருள்களுக்கு பதிலாக கிளவுட் சேவைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இம்மறுசீரமைப்பு, 2014-ல் முன்னாள் நிர்வாக அதிகாரி, ஸ்டீவ் பால்மர் வெளியேறி, சத்யா நடெல்லா பதவிக்கு வந்த பின் அடுத்தடுத்து நிகழும் மறுசீரமைப்புகழில், சமீபத்திய ஒன்றாகும். இதனால் உடனே யாரையும் வேலையை விட்டு நீக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னாலும், வியாபார உத்தியை மாற்றுவதால் ஆயிரக்கணக்கானோருக்கு நாட்கள் போகப்போக வேலை போகலாம் என்று தெரியவருகிறது.
இருப்பினும் இம்மறுசீரமைப்பினால் மைக்ரோசாப்டின் அன்றாடப் பணிகளில் பெரும் பாதிப்பு எதுவும் இராது.
மைக்ரோசாப்ட் கிளௌட் பிரிவின் முன்னாள் தலைவரான நாடெல்லவை நிர்வாக அதிகாரியாக நியமித்ததில் இருந்து, அதன் அஜூர் கிளவுட் கம்ப்யூட்டிங் (Azure cloud services) தளத்தை கட்டமைப்பதற்கும், பிற நிறுவனங்களுக்கு மென்பொருள் சந்தாக்களை விற்பனை செய்வதற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகமான நபர்களையும் தேவையான பிறவற்றையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
Read More →Jul 4, 2017
இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பில், சீனாவின் சாலைத் கட்டுமானம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்களினிமித்தம், சிக்கிம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கூடுதலாக வீரர்களை குவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளையும் சீனப் படை வீரர்கள் தகர்த்தாக கூறபடுகிறது.
இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் 1962 போரை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இந்திய அரசு எல்லையில் அடாவடியாக சாலை அமைக்கும் திட்டம் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியா எச்சரிக்கையை விடுத்தது.
Read More →Jul 3, 2017
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 5 ஏக்கருக்கும் அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், 3 மாதங்களில் அரசாணை வெளியிடவும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
Read More →Jul 3, 2017
ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. பூனம் ராவுத், மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.
இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மான்சி ஜோஷி 4, பூனம் யாதவ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 4, சாடியா யூசுப் 2, டயானா, அஸ்மாவியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Read More →Jul 3, 2017
கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும்; ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர்.
Read More →Jul 3, 2017
இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது. இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.
Read More →Jul 2, 2017
உத்தரபிரதேசத்தில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சாயானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த, ஸ்ரேஷ்டா தாகூர், புலந்ஷாஹர் பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். ஆவணங்களின்றி வாகனம் இயக்கியதாக எழுந்த புகாரில், பாஜக தொண்டர் ஒருவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதையடுத்து, பெண் காவல் அதிகாரியை முற்றுகையிட்ட பாஜகவினர் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், மேலிட உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read More →Jul 2, 2017
நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா
ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.
பின்னர், போலீசார் அங்கு சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
Read More →Jul 2, 2017
எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது. இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால், புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.
Read More →Jul 2, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்பிளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகியதை தொடர்ந்து 2வது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும். இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்சில் உலக கிரிக்கெட் குழு கூட்டம் வருகிற 3 மற்றும் 4ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
Read More →