Latest Posts
Jul 11, 2017
சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்-சபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
அங்குள்ள பண்ட்லாந்து பிராந்தியத்தில் கல்கலா மலைப் பிரதேச பகுதிகளில் அல்-சபாப் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த முகாம்களை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. இதில் இருபிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 6 முகாம்களை அழித்து, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றியதாக ராணுவம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.
அல்-சபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் பண்ட்லாந்து பிரதேச ராணுவத்தினருக்கு, அமெரிக்க படையினர் ஆதரவும், பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
Read More →Jul 11, 2017
நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
சென்ற பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, நடிகை பாவனா கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவையே உலுக்கிய இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், சம்பவம் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைதானான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
Read More →Jul 11, 2017
காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.
தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Read More →Jul 10, 2017
தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.
2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
Read More →Jul 10, 2017
இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More →Jul 10, 2017
காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே அமர்நாத் திருப்பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் அனந்த்னாக் அருகே ஒரு பொலிஸ் குழு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார். இது அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.
தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி பெறுகின்றனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள இணைய சேவைகள் தாக்குதலுக்கு பின்னர் தடுக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான யாத்ரீகர்களின் பஸ் குஜராத்தில் இருந்து புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டுள்ளது.
Read More →Jul 10, 2017
வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.
Read More →Jul 10, 2017
பாகிஸ்தான் எல்லையில் அரபிக்கடலில் அத்துமீறி புகுந்து மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்தது. பாகிஸ்தானின் கராச்சியின் லான்டிகி ஜெயிலில் உள்ள 78 இந்திய மீனவர்கள் விடுதலையாகி உள்ளனர்.
இதுகுறித்து சிந்துமாகாண உள்துறை செயலாளர் நசீம் சித்திக் கூறுகையில் ‘பாகிஸ்தான் சிறையில் உள்ள 78 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று(திங்கட்கிழமை) இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இன்னும் 298 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா? என்பதை உறுதி செய்யும் பணி நடக்கிறது. அதன்பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்’ என்றார்.
Read More →Jul 10, 2017
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், 7 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ அந்த மாகாணத்தின் 180 இடங்களில் பரவி உள்ளது. மேலும், காற்று பலமாக வீசுவதால் தீ காட்டுப்பகுதியையொட்டி உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 7 ஆயிரம் பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று அந்நாட்டின் வானிலை இலாகா அறிவித்து இருக்கிறது.
Read More →Jul 10, 2017
தலைநகர் டெல்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் துப்புரவு பணி செய்து வரும் நபர் ஒருவர் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்நபர் சிறிது நேரம் கழித்து சிறுமியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற நபர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என கூறப்படுகிறது.
Read More →