Latest Posts

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

Jul 16, 2017

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை. இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More →

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

Jul 16, 2017

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்….. மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.

Read More →

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

Jul 15, 2017

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு யோசனையாக பா.ம.க. இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 95 கோடி லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Read More →

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்

Jul 15, 2017

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப் பட்டார். யூ டியூப் வட்டாரத்தில் ‘சூப்பர் உமன்’ என்ற பெயரில் பிரபல நட்சத்திரமான இவர் ஹிந்தியில் சில காணொலிகளை வெளியிட்டும், அதே போல ஆங்கில காணொலிகளில் ஹிந்தி சப்-டைட்டில்களை இடுவதன் மூலம் தனது வலைப்பதிவும், சேனலும் ஏராளமானவர்களை சென்றடைய செய்யப்போவதாக கூறினார். யூ டியூப்பில் 11.9 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ள இவர் இந்த ஐநா அமைப்பின் பணிகளை விளக்கி தன்னைப் பின் தொடர்பவர்களை குழந்தைகளின் நலனுக்கு வேலை செய்ய வலியுறுத்தவுள்ளார். ஓரு புதிய முயற்சியாக சமூக வலைதளங்களில் #பெண் குழந்தைகளின் மீது அன்பு எனும் ஹேஷ்டேக்கில் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார்.

Read More →

நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம்

Jul 15, 2017

சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது. சீன அரசின் பிரபலமான விமர்சகராகவும், மனித உரிமைச் செயற்பாட்டளரும் இருந்த அவரை சீன அரசு 11 ஆண்டுகளாக சிறையில் அடைத்து இருந்தது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்தார். லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி கலந்து கொண்டார். அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் லியு-விற்கு பிரியாவிடை அளித்தனர். “உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Read More →

பீகாரில் ஆளும் மெகா கூட்டணி உடையுமா? நிதீஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியை தேஜேஸ்வி யாதவ் புறக்கணிப்பு

Jul 15, 2017

சனிக்கிழமையன்று பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாருடன் தான் கலந்து கொள்ளவிருந்த மானில அரசு நிகழ்ச்சியொன்றை துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் புறக்கணித்ததால், பீகாரில் ஆளும் மெகா கூட்டணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பாட்னாவில் இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது. அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக அவரது பெயர், முதலில் மறைக்கப்பட்டு பின்னர் பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்டது. நிதிஷ் குமார் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Read More →

ஏ.ஆர். ரகுமானின் லண்டன் இசைக் கச்சேரியால் ஹிந்தி ரசிகர்கள் விரக்தி

Jul 15, 2017

ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.   இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.   இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Read More →

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Jul 15, 2017

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவை வலுவாக இருப்பதால், அவரை வழக்கு விசாரணைக்கு உள்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதே சமயம், குற்றப்பத்திரிகையில் அதிமுக (அம்மா) துணைப்பொதுச் செயலாளர் தினகரன், மல்லிகார்ஜுனா, நாது சிங், லலித் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான விளக்கமும் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளது. இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் செராவத் கூறுகையில், தற்போது சுகேஷ் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

Read More →

இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கபூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

Jul 15, 2017

மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(வயது 27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2012 ம் ஆண்டு சிங்கப்பூர் குடி நுழைவு மையத்தில், இவர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே அந்த காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

Read More →

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர்

Jul 14, 2017

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »