Latest Posts
Jul 17, 2017
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார். ஆஸ்திரேலிய தொடரின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முரளி விஜய்க்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
Read More →Jul 17, 2017
திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.
ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரூபா அளித்திருந்த அறிக்கையில், சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →Jul 17, 2017
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர்.
இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7 அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே தசநாயகே உள்ளிட்ட 7 அதிகாரிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More →Jul 17, 2017
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர்.
போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார். ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்துள்ளார். மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
Read More →Jul 17, 2017
பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More →Jul 16, 2017
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 16 அமர்நாத் திருப்பயணிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 25 பேரு படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரம்பன் மாவட்டத்தில் பானிஹால் பகுதியில் உள்ள நச்சிலா பகுதியில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடைபெற்றது என்றார். மேலும், ஸ்ரீநகரில் பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு எண் JK02Y 0594 ஐ கொண்ட பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்றார்.
ஜம்முவிற்கு சிறப்பு சிகிச்சைக்காக படுகாயமடைந்த பத்தொன்பது பேர் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
Read More →Jul 16, 2017
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.
எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. ‘தி நெக்ஸ்ட் வெப்’ என்ற சஞ்சிகையின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.
Read More →Jul 16, 2017
இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.
Read More →Jul 16, 2017
பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் கருத்து தெரிவித்த டிஐஜி ரூபாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தனது புகார் குறித்து சிறைத்துறை டி.
Read More →Jul 16, 2017
இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்.
இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது.
Read More →