Latest Posts

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019 - ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

Jul 22, 2017

பல மாநிலங்களில் மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டு வரும் பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்தியா விட்டு பா.ஜ.வை வெளியேற்றும் புதிய இயக்கத்தை ஆக.9 -ம் தேதி மாநிலம் முழுவதும் துவங்கப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். நேற்று, கோல்கட்டாவில் திரிணாமுல் காங். கட்சி சார்பில் தியாகிகள் தின பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது :   ராஜஸ்தானில் ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல் புகார் எழுந்துள்ளது, சிபிஐ எங்கு சென்றது. என்ன தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?

Read More →

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

Jul 22, 2017

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று விஜய்காந்த் கூறினார். கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசும்போது, ”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. இங்கு பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் வரவில்லை. மக்களுக்காகப் போராடவே வந்திருக்கிறேன்” என்றார்.

Read More →

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

Jul 22, 2017

குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார். குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.

Read More →

கமல்ஹாசனைக் கண்டித்து அ.தி.மு.க.வின் நமது எம்ஜிஆர் நாளேடு கவிதை

Jul 22, 2017

சமீப காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர், இன்று திடீரென பழைய ஞாபகம் திரும்பியதைப்போல, கமல்ஹாசன் மீது கண்டனச் செய்தி விளியிட்டுள்ளது.   அதில் கூறப்பட்டு இருப்பதாவது: “வில்லன் வழி சொல்லத் தெரியாதவனுக்கு பழி சொல்ல மட்டுமே தெரியும் என்பார்கள்! இதற்கு மெத்தப் பொருத்தமாகிறார் ‘மொத்தமும் வில்லன்!’ ஏழைக்குப் பயன்படாத இந்த குரோட்டன்ஸ் செடி எளியோருக்குப்பயன்படும் கீரையைப் பார்த்து பழிக்கிறது! ‘உன்னால் முடியும் தம்பி’ என்று இவர் உதட்டளவில் வாயசைத்துப்பாடியதை, இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து உலகை உள்ளங்கைக்குள் உட்கார வைத்த ஒப்பில்லா கழகத்தை முப்பொழுதும் தப்பென்று பழிக்கிறார்.

Read More →

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

Jul 22, 2017

பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

Read More →

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Jul 21, 2017

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர். இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான வி‌ஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். அசாதாரணமான ஒரு இன்னிங்சை ஹர்மன்பிரீத் கவுர் ஆடியிருக்கிறார்.

Read More →

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

Jul 21, 2017

ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன் என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா 500MB அளவுக்குமேல் கிடைக்காது. இதர வசதிகளாவன : நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.

Read More →

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

Jul 21, 2017

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமானால், அங்கு இயங்கி வருகிற அனைத்து விதமான பயங்கரவாத குழுக்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வழி வகுத்துத்தந்துள்ளது.

Read More →

இந்தியாவின் 14 - வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25 - ந் தேதி பதவி ஏற்கிறார்

Jul 21, 2017

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார். ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி ஆவார். டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்கும் ராம்நாத் கோவிந்த், டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.

Read More →

துருக்கி - கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

Jul 21, 2017

துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின. கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »