Latest Posts
Jul 23, 2017
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வென்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சாரா டெய்லர் 45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.
Read More →Jul 23, 2017
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது.
20 நிமிடம் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, தனது உரையில் , ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி. அவர்தான் என்னுடைய வழிகாட்டி, அவரை அடுத்து வாஜ்பாய், நரசிம்ம ராவ் அவர்களைக் கூறுவேன். சில சமயங்களில் அத்வானியை பின்பற்றியுள்ளேன்.
Read More →Jul 23, 2017
அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்திலுள்ள வால்மார்ட் சூப்பர்மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ஞாயிறு காலை நிலவரப்படி 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கன்டெய்னரில் இருந்த 38 பேரில் 8 பேர் உயிரிழப்பு, 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கன்டெய்னரில் அடைத்து மனிதர்களை கடத்தி வந்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.
Read More →Jul 23, 2017
அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுவது அழகல்ல. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான நடைமுறை ஆகாது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Read More →Jul 23, 2017
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது.
இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் உலகின் கதாநாயகர்களில் ஒருவரான டோனி வருகை தந்ததால், அவரை காண ரசிகர்கள் படையெடுத்தனர்.
Read More →Jul 23, 2017
டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
Read More →Jul 23, 2017
இலங்கை, வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இவர் மிகவும் தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.
நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன் நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில், மோட்டர்சைக்கிளில் வந்த மற்றொரு மெய்ப்பாதுகாவலர், வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.
அப்போது, அந்த இடத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
அந்த நபர் துப்பாக்கியைப் பறித்தெடுத்தபோது, அந்த காவலருடன் இடம்பெற்ற இழுபறியில் காவலர் காயமடைந்தார்.
Read More →Jul 22, 2017
11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.
வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள் அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி பொருள்களிலிருந்து உருவானவையா அல்லது செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் குறுக்கீடுகளாலா என அவர்கள் அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.
Read More →Jul 22, 2017
சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே. இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.
தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.
Read More →Jul 22, 2017
இன்று காலை ராமேசுவரம் வந்த இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று, அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மேலும் மயில்சாமி அண்ணாதுரை , “மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடமும் மாணவ-மாணவிகளிடமும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.
Read More →