Latest Posts
Jul 28, 2017
ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.
இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.
Read More →Jul 28, 2017
நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும்.
Read More →Jul 28, 2017
வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பனாமா ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.
Read More →Jul 28, 2017
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
Read More →Jul 27, 2017
பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை, டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது.
இதனிடையே, டிஐஜி ரூபா, வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிஐஜி ரூபாவிற்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Read More →Jul 27, 2017
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர், அப்துல்கலாமின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பின்னர், ‘அப்துல் கலாம் – 2020’ என்ற அப்துல் கலாமின் சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Read More →Jul 27, 2017
தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும்.
Read More →Jul 27, 2017
நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார்.
Read More →Jul 26, 2017
நாளை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை கொண்டாடுகிறது. அச்சமயத்தில், வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More →Jul 26, 2017
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த பூர்வா விரைவு ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக, சென்ற வாரம் கணக்குத் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் – சந்தவ்லியில், பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ரயிலில் வாங்கிய பிரிஞ்சியில் பல்லி விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பயணி ரயில்வே அமைச்சருக்கு டிவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். அதில் அவர் அந்த உணவை கவனிக்காமல் உண்டுவிட்டதால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Read More →